Others
அரசுக்குஅவப்பெயர்ஏற்படுத்தும் அதிகாரிகளின் அநாகரிக செயல்…..?
சாத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விஏஓ முதியவரை தாக்கியதால் பரபரப்பு…..?
ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது இம்முகாமில் உப்பு பேட்டை கணபதி நகரை சேர்ந்த
வெங்கடபதி என்பவர்மனுகொடுத்துவிட்டுஅங்கிருந்தஅதிகாரியிடம் அதற்குரிய ரசீது கேட்டுள்ளார் இச்சம்பவத்திற்கு சம்பந்தமில்லாத அருகில் இருந்த சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சாபுதீன் என்பவர் ஓடி வந்து முதியவரை பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார் கோபம் பொறுக்க முடியாத முதியவர் எழுந்து பதிலுக்கு தாக்கியுள்ளார் சம்பவம் அறிந்த அருகில் உள்ள போலீசாரும் முதியவரை மீண்டும் தாக்கி அங்கிருந்து வெளியே துரத்தி விட்டனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.