fbpx
Others

அரசின்கவனத்திற்க்கு–என்ன நடக்குது பெரியகுளம் மருத்துவமனையில்–?

தமிழ்நாடு – தேனி மாவட்டம் பெரிய குளம் அரசு மருத்துவமனையில் சும்மா காட்சிக்கு வேலை பார்க்கும் டாக்டர்கள் ??? பெரிய குளம் அரசு மருத்துவமனையில் சும்மா காட்சிக்கு வேலை பார்க்கும் டாக்டர்கள்…இன்று சளி இருமல் காய்ச்சல் என போயிருந்தேன் .2 நம்பர் O P பார்க்கும் டாக்டர்கள் 2 பேர் மட்டும் . கிட்ட தட்ட 100 புற நோயாளி பெண்கள் . பள்ளி மாணவிகள் குழந்தைகள் என வரிசையில் காத்திருக்கின்றோம் அதில் 11 மணிக்கு 1 டாக்டர் வெளியேறிவிட்டார்…மூச்சு வாங்கி பிரசரில் மயக்கம் வந்து விட்டது சட்டென என் பிரஸ் கார்டு காட்டி மேடம் உங்க நிலை தெரிகிறது கூட்டம் அதிகமாக இருக்குபோது 1 டாக்டர் போதாது . நான் டீன் கிட்டே சொல்லுகிறேன் என போனேன் ..ஆனால் நடந்தது ரமனா படம் போல் இருந்தது . டீன் பார்க்கக்கூடாது மேடம் என 1/2 மணி நேரம் கழித்து S O சாரை பார்க்கனும் நீங்க இப்ப என்ன பண்றீங்க நேரா போய் லெஃப்ட் எடுத்து பிரசவ வார்டு பக்கத்தில் இருக்கும் S O கிட்ட போங்க என்றார் .சரி என அங்கே போனால் இப்படிக்கா அப்படிக் கா போகிறார் ..உள்ளே உட்கார்ந்து ஸ்கேன் பன்றார் ..சி சி டி கேமராவில் பார்த்து அவரை கவனிக்கும் பெண்களிடம் I D கார்டு வாங்கிட்டு வாங்க எந்த பிரஸ் யார் அவங்க எதுல இருக்கீங்க என கேள்வி அந்த ரிப்போர்ட்டர் தெரியுமா இந்த ரிப்போர்ட்டர் தெரியுமா என ஒரு ரிப்போர்ட்டர் வரும்வரை என்னிடம் தாச்சாவா பேசி நேரத்தை கடத்தி O P யா டாக்டர் இருக்கனுமே போன் போடுங்க செல்வி என்னாச்சு கூட்டம்னு கம்ளய்ன்ட் வருது என்றதும் இல்லிங்க சார் 2 பேருதான் இருக்காங்க என்ற பதில் …எப்புடுராஆஆ ன்னு குழம்பி வந்தேன் …பிரஸ் மீடியா என்ன சொன்னாலும் சில லஞ்சம் வாங்கும் பிரஸ் நபர்களை வைத்து கொண்டு நிறைய வேலை செய்யாத …தன்னுடைய கிளினிக் ஆஸ்பிட்டல் வளர சம்பாதிக்கும் டாக்டர்களை தூக்கி போட்டுட்டு வேலை இல்லாத மனிதம் காக்கும் டாக்டர்களை பணிக்கு நியமித்தால் நல்லது …இது குறித்து செய்தி போட்டதால் எனக்கு இல்லாத நோயை சொல்லி சாகடிக்க வாய்ப்பு உண்டு எனக்கு எதாவது எனில் பத்திரிகை சகோதரர்களே …நியாயம் கேட்க வேண்டுகிறேன் ? என்று ஒரு பத்திரிகை பெண் செய்தியாளர் கோரிக்கை விடுத்த நிகழ்வு….. ஏனெனில் ஒரு செய்தியாளர் உண்மை நிலையை அரசுக்கும், இது சம்பந்தமான மேலதிகாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தக்கூட முடியாத அளவுக்கு ஒரு பத்திரிகையாளரின் நிலைமை ??? இந்த நிலை மாறுமா ? மாற்றிக்காட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர்கள் என்ற முறையில் இவற்றிற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் …, ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close