fbpx
Others

அயோத்தி கோயில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை..

அயோத்தி: நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அயோத்தி கோயில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை படம் நேற்று வெளியானது. அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு நாளை மறுநாள் திறக்கப்படஉள்ளது. பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டும் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் அயோத்தி கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலையின் முதல் படம் நேற்று வெளியிடப்பட்டது. கருங்கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலையில் கண்களை மஞ்சள் துணியால் மூடி, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று விஸ்வ இந்து பரிஷத்தின் அலுவலகப் பொறுப்பாளர் ஷரத் சர்மா தெரிவித்தார். விஎச்பி வெளியிட்டுள்ள கருவறை படத்தில் ராமர் நின்ற கோலத்தில் உள்ளார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ராம ஜென்மபூமி கோயிலின் கருவறையில் புதிய ராமர் சிலை வியாழக்கிழமை வைக்கப்பட்டது. மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் சிற்பமாக வடித்த 51 அங்குல ராமர் சிலை இதற்காக புதன்கிழமை இரவு அயோத்தி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. உரிய பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் ராமர்சிலை கருவறைக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.  கருவறைக்குள் ராமர் சிலையை அறக்கட்டளையின் உறுப்பினரான அனில் மிஸ்ரா வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விஎச்பி அலுவலக பொறுப்பாளர் ஷரத் சர்மா கூறுகையில்,’ அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை அனைவரின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும், மனிதகுலத்தின் நலனுக்காகவும், இந்த கோயில் பணிக்கு பங்களித்தவர்களுக்காகவும் செய்யப்பட்டது. இது தவிர, மற்ற சடங்குகளும் செய்யப்பட்டன. பிராமணர்களுக்கு ‘வஸ்திரங்கள்’ வழங்கப்பட்டன. ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்குள் நிறைவடையும்.  கும்பாபிஷேகத்திற்கான சடங்குகள் கோயிலில் ஏற்கனவே தொடங்கிவிட்டன’ என்றார். ஜன.22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அம்பானி முதல் அமிதாப்பச்சன் வரை ஏராளமான விஐபிக்கள் மாநில அரசு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் சுமார் 8,000 பேர் உள்ளனர். திரையுலகில் இருந்து, நடிகர்கள் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், அக் ஷய் குமார், அல்லு அர்ஜுன், மோகன்லால், அனுபம் கெர் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் பட்டியலில்இடம்பெற்றுள்ளனர். முகேஷ் அம்பானி, அவரது தாயார் கோகிலாபென், மனைவி நீதா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த், மருமகள் ஸ்லோகா மற்றும் மருமகளாக இருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது மனைவி நிர்ஜா, பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமல், மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் ஆனந்த் மஹிந்திரா மற்றும் டிசிஎம் ஸ்ரீராமின் அஜய் ஸ்ரீராம் மற்றும் டிசிஎஸ் சிஇஓ கே. கிருதிவாசன் ஆகியோரும்அழைக்கப்பட்டுள்ளனர். *பலமாநிலங்களில்  ஜன.22ல் அரை நாள் விடுமுறை அறிவிப்பு. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.22ம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு நாடு முழுவதும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்பின்பற்றி பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளன. திரிபுரா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஜன.22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் நாள் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.* அனுமான் பிறந்த இடமான கிஷ்கிந்தாவிலிருந்து அயோத்தி வந்தது தேர்கர்நாடகாவின் ஹம்பி பகுதியில் அனுமான் பிறந்த இடமாக கருதப்படும் கிஷ்கிந்தாவிலிருந்து தேர் அயோத்தி வந்தடைந்தது. இந்த தேர் நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு சென்றுவிட்டு, அயோத்திக்கு செல்வதற்கு முன், இன்றைய நேபாளத்தில் உள்ள சீதா தேவியின் பிறந்த இடமான ஜனக்பூருக்குச் சென்றது. இந்த தேருடன் 100 பேர் கொண்ட பக்தர்கள் குழு, பாடி, நடனம் ஆடி, ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியும், ராமர் படங்களுடன் கூடிய காவி கொடிகளை அசைத்தும் தேருடன் பயணித்தனர். 2 மாத பயணம் செய்த தேர் தற்போது அயோத்தி வந்து சேர்ந்துள்ளது. ஜன.25ம் தேதி வரை தேர் அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரயு நதிக்கரையில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது.தாய்லாந்தின் அயுத்யாவில் உள்ள பக்தர்களும் அயோத்தி ராமர் கோயில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அயோத்தியின் பெயரால் பெயரிடப்பட்ட அயுத்யாவிலிருந்து மண்ணையும், தாய்லாந்தின் மூன்று நதிகளான சாவ் பிரயா, லோப் புரி மற்றும் பா சாக் உள்ளிட்ட நீரையும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய அயுத்யா மற்றும்தாய்லாந்தின்பிறநகரங்களில்உள்ளஇந்துகோயில்களில்பிரமாண்டதிரைகள்வைக்கப்படுகின்றன.அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட வயநாடு மக்களவை தொகுதியில் பிரமாண்டமாக கொண்டாட பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டுள்ளது. பா.ஜ மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் அங்கு செல்கிறார். வயநாட்டில் பொங்குழி ஸ்ரீராமர் கோவிலில் நடக்கும் அயோத்தி விழாவின் நேரடி ஒளிபரப்பை அவர் தலைமையில் பா.ஜ தலைவர்கள் காண்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக 2019 நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்ற இப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எஸ்ஏ பாப்டே, முன்னாள் நீதிபதிகள் அசோக் பூசன், அப்துல் நசீர் ஆகியோருக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக 11 நாள் விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி இளநீர் தண்ணீர் தான்குடித்து வருகிறார். மேலும் அவர் கோ பூஜை மேற்கொண்டு, பசுக்களுக்கு உணவு அளித்தார். சாஸ்திரங்களின் அடிப்படையில் ஆடை தானம் வழங்கினார் .அயோத்திகும்பாபிஷேகத்திற்காக மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வர் கோயிலில் தயாரிக்கப்பட்ட 5 லட்சம் லட்டுகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

Related Articles

Back to top button
Close
Close