fbpx
Others

அமைச்சர் மா.சுப்பிரமணியன்-புதிய மருத்துவ சேவைகளைதொடங்கி வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.90 லட்சத்தில் ரத்த நாள அறுவை சிகிச்சை உயர் சிறப்பு நிலையம், ரூ.1.30 கோடியில் இன்போசிஸ் நிறுவனத்தின் மூலம் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் தன்னியக்க நரம்பு மண்டல ஆய்வகம், ரூ.8 லட்சத்தில் பக்கவாத இடைநிலை சிகிச்சை பிரிவு, ரூ.3.85 லட்சத்தில் மருத்துவ பணியாளர்களுக்கான (ஆண் மற்றும் பெண்) ஓய்வு மற்றும்ரூ.2.84 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ சேவைகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார் ஒப்பனை அறை, ரூ.50 லட்சத்தில் முழு உடல் பரிசோதனை மையத்தில் இருதய நோய் சிறப்பு பரிசோதனை மற்றும் ரூ.2 லட்சத்தில் இணைய வழி மருத்துவ ஆலோசனை மையம் ஆகிய பல்வேறு புதிய மருத்துவ சேவைகளைதொடங்கி வைத்தார்.  ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 லட்சத்தில் இணைய வழி மருத்துவ ஆலோசனை மையம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.இங்கிருந்துதற்போதுகள்ளக்குறிச்சியில்  இருக்கின்ற ஒரு தாயுடன் அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற சிறு பாதிப்புகள் குறித்து இங்கு உள்ள மருத்துவர்களுடன் எடுத்துச் சொல்ல அதற்கான தீர்வும் தற்போது இங்கிருந்து சொல்லப்பட்டிருக்கிறது இப்படி இணையவழி மருத்துவ சேவை திட்டமும், ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் 6 வகையான மருத்துவ சேவைகள் பயன்பாட்டிற்கு வருகின்றது. ஏற்கனவே பொதுமக்கள் அரசு மருத்துவ சேவையினை பயன்படுத்த தொடங்கி இருக்கும் நிலையில் தற்போது புதிய புதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் இதனை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அரசு முதன்மைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்தரி டீன் டாக்டர் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் இணைய வழி மருத்துவ ஆலோசனை மைய ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் மது, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close