fbpx
Others

அமைச்சர்துரைமுருகன்அப்பலோமருத்துவமனையில் அனுமதி…

திடீரென மயங்கிய அமைச்சர் துரைமுருகன்.. தோள்பட்டை எலும்பில் காயம்! நேரில்  நலம் விசாரித்த முதல்வர் | Tamil Nadu Minister Duraimurugan faints, treated  in hospital; CM ...தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் துரைமுருகன், தற்போது திமுக பொதுச்செயலாளராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். 87 வயதாகும் துரைமுருகன், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காங்குப்பம் கிராமம் சொந்த ஊராகும், காட்பாடி தொகுதியில் இருந்து தொடர்ந்து பல முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். துரைமுருகன் திமுகவின் நீண்டகால அனுபவம் மிக்க தலைவர்களில் ஒருவராக, மு.க. ஸ்டாலினுக்கும் கருணாநிதி காலத்திலிருந்து தொடர்ச்சியான வழிகாட்டியாக விளங்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இருதய அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வயது மூப்பு காரணமாக துரைமுருகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீட்டில் மாடியில் ஏறும் போது தடுமாறிகீழேவிழுந்த்தில்கையில்காயம்ஏற்பட்டது.இதனையடுத்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் வீட்டில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அமைத்தல் துரைமுருகனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்துஉடனடியாகஅப்பலோமருத்துவமனையில்சிகிச்சைக்காக   அனுமதிக்கப்பட்டார். துரைமுருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் துரைமுருகன் கால் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போதுஅவரதுஉடல்நிலைநல்லநிலையில்உள்ளது.மருத்துவர்கள்தொடர்ந்துசிகிச்சைஅளித்துவருகிறார்கள்.கால்வலிக்காகமருந்துகள்வழங்கப்பட்டுத்தாகவும், ஒரு சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தார்.

Related Articles

Back to top button
Close
Close