அமித் ஷா அழைப்பின் பெயரில் ஓபிஎஸ் மீட்டிங்….
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி பிணைப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது கண்கூடாகத் தெரிய தொடங்கி உள்ளது. இந்த பயணம் காரணமாக எடப்பாடி பழனிசாமி – பாஜக இடையே நெருக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. எடப்பாடி – பாஜக நெருக்கம் இந்த பயணம் காரணமாக எடப்பாடி பழனிசாமி – பாஜக இடையே நெருக்கம் ஏற்பட்டு
உள்ளது. இது ஒரு வகையில் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறவும் காரணமாக அமைந்துவிட்டது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் சமீபத்ஹில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்..தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அனுமதி கோரிய நிலையில், பாரதிய ஜனதாகட்சியின்தரப்பில்கடைசிவரைஎந்தப்பதிலும்அளிக்கப்படவில்லை. பிரதமரைச் சந்திக்க இயலாததால்அதிருப்திஅடைந்தஓபிஎஸ்தரப்பு,பாஜககூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புகள் குறித்து பின்னர் நயினார் நாகேந்திரன் ஊடகங்களிடம் விளக்கமளித்தார். இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, நயினார் நாகேந்திரனை ஆறு முறை தொடர்புகொண்டபோதும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியது. மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டுஅழைப்புவிடுத்ததாகவும்,நயினார்அழைப்பைஏற்கவில்லை,ஓபிஎஸ்அனுப்பியகுறுஞ்செய்திகளையும் பார்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முரண்பாடு குறித்து மீண்டும் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடம் பாஜக கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் எனத் தொலைபேசி வாயிலாகக் கேட்டிருந்தேன். ஆனால், ஓபிஎஸ்பாஜகவிலிருந்து வெளியேறும்முடிவைஎடுத்துவிட்டார்.எங்களிடம்முன்கூட்டியேதெரிவித்திருந்தால்,மோடியைச்சந்திக்கஏற்பாடுசெய்திருப்போம். மேலும் “ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்தக் கடிதம் என்னிடம் வந்து சேரவில்லை. ஒருவேளை கடிதம் வந்து சேர்ந்தால், அதை நான் கண்டிப்பாகக் காட்டுவேன். அப்போது யார் உண்மை சொல்கிறார், யார் பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல், திடீரென முதலமைச்சர் ஸ்டாலினைநேரில்சந்தித்துப்பேசிவிடமுடியாது”என்றுதெரிவித்தார்.திடீர்திருப்பம்இப்படிப்பட்டநிலையில்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதோடு ஓ பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கி திமுக உடன் கூட்டணி வைப்பார் என்றும் கூறப்பட்டது. இதற்கு இடையே ஓ பன்னீர்செல்வம் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். தற்போது டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 20 நிமிடங்கள் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அமித் ஷா அழைப்பின்பெயரில்ஓபிஎஸ்மீட்டிங்நடத்தியதாககூறப்படுகிறது.அங்கேஓபன்னீர்செல்வத்திற்கு அமித் ஷா முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக தனிக்கட்சி தொடங்கினால் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அமித் ஷா உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.