fbpx
Others

அமித்ஷா – மம்தா பானர்ஜி—சந்திப்பு—மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கொல்கத்தா: பாஜக – திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் ஒரே காரில் 200 கி.மீ தூரம் அமித் ஷா – மம்தா பயணித்தது, மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் கிழக்கு மண்டல கவுன்சிலின்  (இ.இசட்.சி) 25வது கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில்  நடந்தது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் துணை  முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.  முன்னதாக ஆலோசனை கூட்டம் நடக்கும் நபன்னா என்ற இடத்திற்கு செல்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காரில் மம்தா பானர்ஜியும் உடன் சென்றார். கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர். அதன்பிறகு இரு தலைவர்களும் முதல்வரின் 14வது மாடி அலுவலகத்தில் 15 நிமிடங்கள் நேருக்கு நேர் உரையாடினர்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக – திரிணாமுல் கட்சிக்கு இடையே மோதல்கள் அதிகரித்த நிலையில், அமித் ஷா – மம்தாவும் நேருக்கு நேர் சந்தித்து பேசி உள்ளனர். இருவரின் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட  அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Articles

Back to top button
Close
Close