fbpx
Others

அன்னாஹசாரே- ஊழலுக்கு எதிரான புரட்சிகரமான சட்டம்வரவேற்பு

ஊழலுக்கு எதிரான புரட்சிகரமான சட்டம் என புதிய லோக் ஆயுக்தாவுக்கு அன்னா ஹசாரே வரவேற்பு தெரிவித்துள்ளார். சட்டசபையில் தாக்கல் மத்திய அரசின் லோக்பால் அடிப்படையில் மராட்டியத்தில் புதிய லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சமூக சீர்திருத்த வாதியும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே நீண்டகாலமாக போராடி வந்தார். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் புதிய லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என அன்னா புதிய லோக் ஆயுக்தா சட்டத்துக்கு அன்னா ஹசாரே வரவேற்பு ஹசாரேவுக்கு உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் மராட்டிய குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில், லோக்பால் சட்டத்தில் அடிப்படையில் மாநிலத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என்று துணை முதல்-மந்திரி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த புதிய லோக் ஆயுக்தா சட்டத்தில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். அதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இந்த நிலையில் சமுக சீர்திருத்தவாதி அன்னா ஹசாரே நேற்று கூறியதாவது:- புரட்சிகர திட்டம் புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர முடிவு செய்ததற்காக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான புரட்சிகர சட்டமாக இது அமையும் என்று அவர்களிடம் கூறினேன். 2018-ம் ஆண்டு நான் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மாநிலத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றுவதாக உறுதி அளித்தார். ஆனால் பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்திடம் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்களும் எதுவும் செய்யவில்லை. சுற்றுப்பயணம் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு வந்தவுடன், இந்த சட்டம் புரட்சிகரமானது என நிரூபிக்கப்படும். ஏனெனில் லோக் ஆயுக்தாவில் ஊழல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் முதல்-மந்திரி மற்றும் பிற மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட கோரிக்கை எழுப்பப்பட்டபோது மக்கள் என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று அதன் பலனை பாருங்கள். லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் அதிகாரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close