fbpx
Others

அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.. சுணக்கம் கூடாது..

: தலைமை செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பெரியார் சமத்துவபுரம், கிராம சுய உதவி குழுக்கள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் நல்லாட்சியை நாம் நடத்தி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கோடிக்கு மேல் பயன் அடைந்துள்ளனர் அடைந்துள்ளனர். 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக திமுக அரசு உள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டு காலம் பெரும் தொய்வு ஏற்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 20 மாத காலத்தில் ஏரளாமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், லட்சக்கணக்கான பெண்களின் பாராட்டுகளை பெற்றது. காலை உணவு திட்டத்தால் பயன் அடைந்தோர் அரசை பாராட்டி வருகின்றனர்..மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனை கிண்டியில் கட்டப்பட்டு வருகிறது. எனவே 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.  ஒவ்வொரு திட்டத்தையும்கண்ணுக்குமுன்னாள்கொண்டுவந்துஅதனைசெயல்படுத்துங்கள்.திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் கூடாது. அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். அறிவிக்கும் திட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்தால் வெற்றிகரமாக முடியும். 2023க்குள் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்,’என்றார்.

Related Articles

Back to top button
Close
Close