அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரவைக்கும் மெகாமோசடி…?
தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக
கணக்குகாட்டிமோசடிசெய்தவிவகாரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் விளக்கம் கேட்பு 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர்நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பலகல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிப்பு அரசாங்கத்தில் ஊழல் நடப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஆனாலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் 189 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் 10 கல்லூரிகளில் பணியாற்றியதாக வந்துள்ள செய்தி திகைக்க வைக்கிறது.இந்த 189 பேர் சுமார் 2000 வேலைகளை ஆக்கிரமித்துள்ளனர். 224 கல்லூரிகளில் இப்படி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றியதாகவும் தெரிகிறது.
தனிப்பட்ட ஓரிருவர் முறைகேட்டில் ஈடுபட்டால் புரிந்து கொள்ளலாம். ஒரு கூட்டமே ஒன்று சேர்ந்து கொள்ளையடிப்பது பற்றி என்ன சொல்வது?இவர்கள் யாரும் பணியாற்றவில்லை. பல இடங்களில் சம்பளம் வாங்கியிருக்கின்றனர். என்ன அசுர உழைப்பு? எத்தனை ஆண்டுகளாக இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை.பல்கலைக் கழக நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.இந்த ஊழலை பல்கலைக் கழகமே கண்டு பிடித்திருந்தால் கூட பரவாயில்லை. வெளியிலிருந்து அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு புகார் அளித்த பின் விவகாரம் வெளி வந்துள்ளது. இப்போது , ‘ ஆமாம். அப்படித்தான் நடந்துள்ளது. இது பற்றி விசாரிக்க குழு அமைத்துள்ளோம் ‘.என்று கூறியுள்ளது பல்கலைக்கழகம்.ஏற்கெனவே, போலி ஆசிரியர், போலி டாக்டர்கள், போலி வக்கீல் , போலி ரேஷன் கார்டுகள் என்று சாதனை படைத்துள்ள மாநிலம் நம்முடையது.அத்துடன்இந்தசாதனை.போலிபல்கலைக்கழகம்எங்காவதுநடந்துகொண்டிருக்கிறதா என்று யாராவது கண்டுபிடித்து சொல்லும்போதுதான் தெரியும்.நல்ல வேளை. போலி எம்.எல்.ஏ.க்கள் , போலி அமைச்சர்கள் செயல்படுவதாகவோ, ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் அமைச்சராகவும், மூன்று மாநிலங்களில் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பதாக இதுவரை தகவல் வரவில்லை.முறைகேட்டைக் கண்டுபிடித்த அறப்போர் இயக்கம் பாராட்டுக்குரியது. (போலி அறப்போர் இயக்கம் உருவாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்)