fbpx
Others

அண்ணாமலைக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி….

Minister Sekarbabu challenges Annamalai: தெம்பு, திராணி தைரியம் இருந்தா!  தொட்டு பார்க்கட்டும்! அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால்! - Minister  Sekarbabu challenges ...டெல்லியில் அண்ணாமலைக்கு பளார், பளார் என்று அறை விழுந்ததால் ஏதேதோ பேசுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, புளியந்தோப்பு பட்டாளம் சிவராவ் ரோடு, சூளை அங்காளம்மன் கோவில் தெரு பகுதிகளில், இன்று காலை நடைபெற்ற ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு காலை உணவு வழங்கினார். சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு பகுதி 78 (அ) வட்ட திமுக சார்பில், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழ வகைகளை வழங்கினார்.இதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; இன்று 41வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வருகிற 10ம் தேதி 50வது நிகழ்ச்சி கொளத்தூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலான வசதிகளை ஏற்பாடு செய்துள்ளோம். விழாகாலங்களில்கட்டணத்தைரத்துசெய்யலாமாஎன்றுஆலோசனைசெய்துவருகிறோம்.மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்குதனிவரிசைஏற்படுத்தித்தரப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பிரகாரங்களை சுற்றி தரை விரிப்பு ஏற்படுத்தப்படும். தடையின்றி குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குற்றங்களை தடுப்பது ஒருபுறம் இருந்தால் குற்றச் சம்பவங்கள் ஏற்படும்போது அதன் மீதான நடவடிக்கையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறை கையாண்டு குற்றவாளிகளை கைது செய்து ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது. முன்விரோதம் காரணமாக படுகொலைகள் நடக்கிறது. கடந்த காலத்தைவிட தற்பொழுது தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. அண்ணாமலைக்கு டெல்லியில் பளார், பளார் என்று அறை விட்டார்கள். அதை மறைக்க ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவு சரியில்லை என்று சொல்கிறார்.ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவு தரம் இல்லை என்றால் அதை ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு செல்லலாம். குறைகள் சொல்லக்கூடாது. குறைகளை கூட குற்றச்சாட்டுகளாக சொல்லும்பொழுது தான் பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் உணவு தரமற்று உள்ளது அண்ணாமலையை வரச் சொல்லுங்கள் நாம் சென்று ஆய்வு செய்வோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close