fbpx
Others

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு கண்டுணர் கல்வி சுற்றுலா

திருத்துறைப்பூண்டி வட்டர வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் மாவட்ட அளவிலான கண்டுணர் கல்வி சுற்றுலா வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படி திருத்துறைப்பூண்டி வட்டார கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகளை மன்னார்குடி மேலநாகை SAK பண்ணையில் பந்தல் முறையில் காய்கறிகள் சாகுபடி செய்தல் மற்றும் நிரந்தர பந்தல் அமைப்பதற்கான மானிய விவரங்களை தோட்டக்கலை துறையை அணுகி பெறலாம் என்றும் மற்றும் பழ த்தோட்டம் அமைப்பது பற்றியும் , நுண்ணீர் பாசனம் பற்றியும் ,இயற்கை பயிர் ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டி பற்றியும் பண்ணை மேலாளர் விளக்கினார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மாநில தோட்டக்கலை பண்ணை உதவி தோட்டக்கலை அலுவலர் விஜயகுமார் பசுமை குடிலில் காய்கறி நாற்றுகள் தயாரித்தல் பற்றியும் மானிய விவரங்கள் பற்றியும் பழ மர பயிர்களான மா பலா கொய்யா நெல்லி எலுமிச்சை போன்றவற்றில் ஒட்டு கட்டுதல் பற்றியும், மலர் செடிகளான குண்டு மல்லி, முல்லை செண்டு மல்லி நாற்று தயாரிப்பு பற்றியும் நடவு செய்தல் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். சுற்றுலாவில் விவசாய பண்ணை மகளிரும் மற்றும் விவசாயிகள் 50 பேர் கலந்து கொண்டனர். சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திக் ,அகல்யா செய்திருந்தனர்

Related Articles

Back to top button
Close
Close