fbpx
Others

அடாவடிமகன்–81 வயது நிரம்பியமுதியவருக்குஉதவியபோலீஸ் கமிஷனர்…..

சென்னை கோயம்பேடு ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 81 வயது நிரம்பிய முதியவரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு ‘இ-மெயில்’ மூலம்அடாவடி செய்து சொத்து பத்திரத்தை கொடுக்க மறுத்த மகன்: 81 வயது முதியவர் வீட்டுக்கு போலீஸ் படையை அனுப்பி உதவி செய்த போலீஸ் கமிஷனர் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறி இருந்ததாவது: நானும், எனது மனைவி வசந்தியும் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறோம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு என் மனைவி வசந்தி படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார். கோயம்பேடு பழ மார்க்கெட்டில் எங்களுக்கு சொந்தமான கடை ஒன்று உள்ளது. அந்த கடையை அடமானம் வைத்து நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.25 லட்சத்தை எனது மகன் ஒருவர் கடனாக வாங்கி இருந்தார்.அந்த கடனை அவர் முறையாக திருப்பி செலுத்தவில்லை. இதனால் இந்த கடை ஏலத்துக்கு வந்துவிட்டது. எனது மற்ற 2 மகன்கள் உதவியோடு ரூ.25 லட்சம் கடனையும் நான் திருப்பி செலுத்திவிட்டேன். பழக்கடையின் பத்திரம் நிதி நிறுவனத்திடம் உள்ளது. அந்த பத்திரத்தை வாங்கி தர மறுத்து எனது மகன் அடாவடி செய்கிறார். குறிப்பிட்ட பத்திரத்தை வாங்கி தர வேண்டும். உங்களை நேரடியாக சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்கி தரவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை படித்து பார்த்த போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். ‘நீங்கள் நேரில் வர வேண்டாம் என்றும், நானே உங்கள் வீட்டுக்கு போலீஸ் படையை அனுப்பி உதவி செய்கிறேன்’ என்றும் முதியவர் ராதாகிருஷ்ணனுக்கு கமிஷனர் தகவல் அனுப்பினார்.அதோடு நிற்காமல் கோயம்பேடு துணை கமிஷனர் குமார் தலைமையில் போலீஸ் படையை ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். போலீஸ் படையினர் முறையாக விசாரணை நடத்தி, குறிப்பிட்ட நிதி நிறுவனத்திடம் இருந்து கடையின் பத்திரத்தை வாங்கி ராதாகிருஷ்ணனிடம் நேரில் ஒப்படைத்தனர். போலீஸ் கமிஷனரின் இந்த அதிரடி நடவடிக்கையை கண்டு ராதாகிருஷ்ணன் நெகிழ்ந்து போனார். போலீஸ் கமிஷனரின் மனிதநேயத்துக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்தும் கமிஷனருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close