fbpx
Others

அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது..?

மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று புதன்கிழமை காலை விபத்தில் சிக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி என்ற இடத்தில் தரையிறங்கும்போது அது? விபத்துக்குள்ளானது.பாராமதி என்பது அஜித் பவாரின் தொகுதியாகும். இதனால் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அஜித் பவார் அவ்வப்போது அங்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாராமதி சென்றுள்ளார். சிறிய ரக தனி விமானம் மூலம் அஜித் பவார் அங்கு சென்றுள்ளார். அப்போது தரையிறங்கும்போது அதில் எதிர்பாராத விதமாக விபத்துAjit Pawar ஏற்பட்டுள்ளது. பாராமதி ஏர்போர்ட் என்பது மிகவும் சிறியது. அங்கு தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அஜித் பவாரும் அவரது பாதுகாவலர்களும் அதே விமானத்தில்பயணித்ததாகத்தகவல்கள்வெளியாகியுள்ளன.விபத்து குறித்து வெளியான போட்டோ மற்றும் வீடியோவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் பரவலாகச் சிதறிக் கிடந்தன. தீப்பிழம்புகளும் அடர்ந்த புகையும் அங்கிருந்து வெளிவந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.இந்த விபத்தில் 66 வயதான அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அவர்மருத்துவமனைக்குஅழைத்துச்செல்லும்போதுஅவர்படுகாயமடைந்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்த அனைவருமே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close