fbpx
Others

 இந்தியா–60 ஆண்டுகளில் நடந்த முக்கிய ரயில் விபத்துகள்..

 இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், 1981ல் புயல் காரணமாக ஆற்றில் ரயில் கவிழ்ந்ததால் அதிகபட்சமாக 800 பேர் பலியாகிஉள்ளனர்.
ரயில் விபத்துகளின் விவரம் வருமாறு:
1964, டிச.23 : ராமேஸ்வரம் அருகே பாம்பன் – தனுஷ்கோடி சூறாவளியில் ரயில் கவிழ்ந்து 126 பேர் பலி.  1981, ஜூன் 6 : பீகார் மாநிலத்தில் புயலில் ரயில் ஆற்றில் கவிழ்ந்து 800 பேர் பலி. 1,000 பேர் காயம். 1985, பிப்.23: மபி மாநிலம், ராஜ்நந்த்கானில் 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்து 50 பேர் பலி. 1990, ஏப்.16 : பாட்னா அருகே ரயில் தீப்பிடித்து 70 பேர் பலி.  1993, டிச.21: ராஜஸ்தானில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் மோதி 71 பேர் உயிரிழப்பு. 1995, ஆக.20 உபிமாநிலம்,பிரோஸாபாத்தில் 2 எக்ஸ்பிரஸ்கள் மோதி 250 பேர் பலி.  1996, ஏப்.18: கேரளாவில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், பஸ் மீது மோதி 35 பேர் உயிரிழப்பு.  1997, செப்.14 : அகமதாபாத்-ஹவுரா எக்ஸ்பிரஸ் சட்டீஸ்கரின் பிலாஸ்பூரில் ஆற்றில் விழுந்து 81 பேர் பலி.1998, நவ.26 : பஞ்சாப் மாநிலம் ரயில் விபத்தில் 202 பேர் பலி.  1999, ஆக. 3 : டெல்லி சென்ற பிரம்மபுத்திரா எக்ஸ்பிரஸ், மேற்குவங்கம், கேசல் பகுதியில் அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் மீது மோதி 285 பேர் பலி.  2000, டிச.2 : கொல்கத்தாவில் இருந்து அமிர்தசரஸ் நோக்கிச் சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ், டெல்லி சென்ற சரக்கு ரயில் மீது மோதி 44 பேர் உயிரிழப்பு.  2001, மே 31: உ.பி.,யில் ரயில்வே கிராசிங்கில் நின்ற பஸ் மீது ரயில் மோதி 31 பேர் உயிரிழப்பு.  2001, ஜூன் 22: மங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ், கேரளாவில் கடலுண்டி ஆற்றில் விழுந்து 59 பேர் பலி.
2002, செப்.9: ஹவுரா-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்தில் 130 பேர் உயிரிழப்பு. 2003, மே 15 : பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து 38 பேர் பலி. 2003 ஜூன் 22: மகாராஷ்டிராவில் ரயில் தடம் புரண்டு 51 பேர் உயிரிழப்பு.  2003, ஜூலை 2 : ஐதராபாத் அருகே வாரங்கல் மேம்பாலத்தில் கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் 2 பெட்டிகள் கழன்றதில் 21 பேர் உயிரிழப்பு.
2005 பிப்.3: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூருக்கு சென்ற ரயில், டிராக்டர் மீது மோதி
50 பேர் பலி.  2005, ஏப்.21: குஜராத், வதோதரா அருகே சாபர்மதி எக்ஸ்பிரஸ் – சரக்கு ரயில் மோதி 17 பேர் பலி.   2008, ஆக.1: செகந்திராபாத்தில் இருந்து காக்கிநாடா சென்ற எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து 32 பேர் பலி.   2009, பிப்.14 : ஹவுரா – சென்னை எக்ஸ்பிரஸ் 14 பெட்டிகள், ஒடிசா, ஜாஜ்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு 16 பேர் பலி.  2009, அக்.21: உபி மாநிலம், மதுரா அருகே மேவார் எக்ஸ்பிரஸ் கடைசி பெட்டி மீது கோவா எக்ஸ்பிரஸ் மோதி 22 பேர் உயிரிழப்பு.
2010, மே 28: மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியதில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 100 பேர் உயிரிழப்பு.
2010, ஜூலை 19: மேற்குவங்கத்தில் 2 எக்ஸ்பிரஸ்கள் மோதி 62 பேர் பலி. 2010 செப்.20 : மபி மாநிலம், சிவ்புரியில் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதி 33 பேர் உயிரிழப்பு.  2011, ஜூலை 7: உத்தரபிரதேசத்தில் ரயில், பேருந்து மீது மோதியதில் 38 பேர் பலி.  2012, ஜூலை 30 : டெல்லி – சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், நெல்லூர் அருகே தீப்பிடித்து 30 பேர் பலி.  2013, டிச.28: பெங்களூரு – நாந்தெட் எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து 26 பேர் பலி.  2013, ஆக.19: பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ்கள் மோதி 28 பேர் உயிரிழப்பு.  2014, மே 4: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 20 பேர் பலி.  2015, மார்ச் 20: டேராடூனில் இருந்து வாரணாசி சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 34 பேர் உயிரிழப்பு.
2016, நவம்பர் 20: கான்பூர் அருகே பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு 150க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.  2017, ஜன,22 : ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் ஹீராகுட் எக்ஸ்பிரஸ் 8 பெட்டிகள் தடம் புரண்டு 39 பேர் பலி.  2017, ஆக.19: உபி மாநிலம், முசாபர் நகர் பகுதியில் எக்ஸ்பிரசின் 14 பெட்டிகள் தடம் புரண்டு 23 பேர் உயிரிழப்பு.
2018, அக்.19: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி 61 பேர் பலி. 2023, ஜூன் 2 : ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்ற சரக்கு ரயில் மீது ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம் புரண்டதில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்…

Related Articles

Back to top button
Close
Close