fbpx
Others

வில்லிவாக்கம்–புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா…

வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டேஸ்வரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய். 13.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மோரை கோ.தயாளன் தலைமையில் நடைபெற்றது.  சைதாப்பேட்டை கூட்டுறவு சங்க ஆவடி உதவி ஆணையர் இளவரசன், பொது மேலாளர் நீதிராஜன், பகுதி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாதவரம் சட்டமன்ற உறுப்பினர். எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடை போட்டு  வழங்கினார்.அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதைநிவர்த்திசெய்துதருவதாகஉறுதிஅளித்தார்.மாவட்ட, ஒன்றிய, தி.மு.க நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close