விஜய் 2026 — மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க ஆயத்தமா….!
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கேரளாவில் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கட்சிஅதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை TVK ஆய்வு செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழர்கள் கணிசமாக வாழும் பகுதிகள் மற்றும் விஜய்க்கு வலுவான ரசிகர் பட்டாளம் இருக்கும் மாவட்டங்களில், கட்சி உறுப்பினர்கள் களப்பணியைத் தொடங்கியுள்ளனர். இது, கட்சி கேரள அரசியலில் கால் பதிப்பதற்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது.கடந்த சில வாரங்களாக, கேரளாவில் TVK ஆதரவாளர்களின் சமூக வலைத்தள செயல்பாடு அதிகரித்துள்ளது. சாத்தியமான வேட்பாளர்களாகக் கருதப்படும் சிலர், சமூக நலன் சார்ந்த பணிகள், தொண்டு நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் சமூகப் பங்கேற்புகள் குறித்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். மூத்த குடிமக்களுக்கு உதவுதல், அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல், மாணவர்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற முயற்சிகள் இந்த பதிவுகளில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்னதாக TVK தனது அரசியல் இருப்பை கேரளாவில் அதிகரிக்க விரும்புகிறது. இதற்காக தினமும் ரீல்ஸ் போடவும் தொடங்கி உள்ளனர்.TVK-ன் வருகை கேரளாவில் சிறிய அளவில் இருந்தாலும், கேரளத் தேர்தலில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கக்கூடும். கேரள அரசியல் பெரும்பாலும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆதிக்கத்தில் உள்ளது. பாஜக தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் அங்கே பெரிய அளவில் மாற்று கட்சியாக கால் பதிக்கும் சூழலும் உள்ளது. தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில், கேரளாவில் தங்களின் அமைப்புக்
கட்டமைப்பை சோதிக்க ஒரு வாய்ப்பு இருப்பதாக தலைவர்கள் நம்புகின்றனர். கட்சி இன்னும் ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால்,வரும்மாதங்களில்ஒருதெளிவானதிட்டத்தைவெளியிடும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. அங்கே காங்கிரஸ் உடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைத்தாலும்வியப்புஇல்லை.தற்போது, கேரளாவில் உள்ள TVK தொண்டர்கள் சிறிய கூட்டங்களை நடத்தி, உள்ளூர் குழுக்களுடன் இணைந்து, ஆன்லைன் ஆதரவை திரட்டி வருகின்றனர். இது, 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் முதல் அடியை எடுத்துவைப்பதற்கான தயாரிப்புப் பணிகளாகும். புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக முயன்று வருகிறதாம். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதோடு சேர்த்து அடுத்த வருடம் புதுச்சேரியிலும் ஆட்சியை பிடிக்கவேண்டும்என்பதில்விஜய்தீவிரமாகஇருக்கிறாராம். புதுச்சேரிக்கான முதல்வர்வேட்பாளர்யார்என்பதிலும்தவெகதீவிரமானசிலஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். அதாவது புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக புஸ்ஸி ஆனந்த் களமிறக்கப்படவேண்டம்என்றுவிஜய்நினைக்கிறாராம்.இதற்குபின்சிலகாரணங்களும்,விஜயின்சிலயோசனைகளும்இருப்பதாககூறப்படுகிறது.தமிழக வெற்றி கழகத்திற்குள் நிலவும் உள் முரண்பாடுகள்தற்போதுவெளிப்படையாகத்தெரியத்தொடங்கியுள்ளன.புஸ்ஸிஆனந்தின்சமீபத்தியசெயல்பாடுகளிலும்,அவரதுஅணுகுமுறைகளிலும் விஜய் அதிருப்திஅடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்தின் முக்கிய பொறுப்புகள் குறித்த பல புகார்களை விஜய் பெற்று வருவதாகவும்,அவருக்குஎதிராகவிரைவில்நடவடிக்கைஎதிர்பார்க்கப்படுவதாகவும்மூத்தநிர்வாகிகள்தெரிவித்துள்ளனர்.இப்படிப்பட்டநிலையில்தான்கட்சிக்குள்சீனியரானசெங்கோட்டையன் வருகை புரிந்து உள்ளார். இவருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு இடையே வரும் நாட்களில் ஈகோ மோதல்கள் ஏற்படலாம். ஏற்கனவே அருண், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்போது செங்கோட்டையனும் வந்துள்ளதால் அவருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு இடையே வரும் நாட்களில் ஈகோ மோதல்கள் ஏற்படலாம்.இதனால் புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரிக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம்.புஸ்ஸிஆனந்தைபுதுச்சேரிமுதல்வர்தேர்தல்வேட்பாளராகஅறிவிக்கலாம்என்றுவிஜய்யோசிக்கிறாராம். அங்கே புஸ்ஸிதலைமையில்பணிகளை தீவிரமாகநடத்தி,அவரைஅங்கேவெல்லவைத்துமுதல்வராக்கிவிடலாம்..தமிழ்நாட்டில்செங்கோட்டையனுக்குபொதுச்செயலாளர்அல்லதுஅதற்குஇணையானபதவியைகொடுக்கலாம் இதனால்உட்கட்சிமோதல்வராது.தமிழ்நாடுமுழுமைக்கும்இனியும்புஸ்ஸிஆனந்தைநம்பிஇருக்கமுடியாது.செங்கோட்டையனைஇனிகட்சிக்குள்முன்னிறுத்தலாம்என்றுவிஜய்திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது புதுச்சேரிக்கு புஸ்ஸி சென்றால்.. தமிழ்நாட்டில் தவெக உள்ளே மோதல்கள், கருத்து வேறுபாடுகள் குறையும் என்று விஜய் நினைக்கிறாராம்.