fbpx
Others

விஜய் — வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பல்…வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு ..?

பெரம்பூர் - அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய பாதை: ரயில்வே வாரியம் ஒப்புதல்Trichy Junction, Tiruchirappalli railway station Tamil Nadu, Indian  Railways Video in 4k ultra HDசென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதில் வயது குறித்த விவரங்கள் தவறாக இருந்தன. இதனையடுத்து இன்று மீண்டும் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.இருப்பினும் அதிலும் குழப்பம்நீடிக்கிறது.விஜய் வழங்கிய பிரமாண பத்திரத்தின் ஆவணங்களில் உள்ள சொத்துகளின் மொத்த மதிப்பில் பெரும் மாற்றம் உள்ளது. சென்னை வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பு ரூ. 410,58,82,196/- (சுமார் 410 கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மனுவில் இதில் மொத்த மதிப்பு ரூ. 404,58,57,196/- (சுமார் 404 கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல பெரம்பூர் மனுவில் துணைவியார் பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 15,57,29,421 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது  . ஆனால் திருச்சி பத்திரத்தில், துணைவியார் பெயரில் உள்ள நகைகளின் ரூ.15,51,79,421/   எனக்குறிப்பிடப் பட்டுள்ளது.சுமார்5.5லட்சம்ரூபாய்வித்தியாசம்உள்ளது.வெள்ளிபொருட்கள்விஷயத்திலும்கணக்குதவறாககாட்டப்பட்டிருக்கிறது. அதாவது, சென்னை மனுவில் மனைவி சங்கீதாவிடம் உள்ள வெள்ளிப் பொருட்கள் ரூ. 15,00,000/- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மனுவில், 2 கிலோ, ரூ. 4,75,000/- எனக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல இன்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 2 கிலோ, ரூ. 25,000/- என மிகக் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது. இது விஜய்யின் மனு நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

Vijay

Related Articles

Back to top button
Close
Close