fbpx
Others

விஜய்–சிக்கலில் சிக்க கூடாது என்று நினைக்கிறார்.,கூட்டணிக்கு தயார்…?

நொறுங்கிய பிளான்.. அவசரப்பட்டு அரசியலுக்கு வந்துட்டாரோ.. விஜய்க்கு பெரிய  சிக்கல்! நொறுங்கிடுச்சே | Why will TVK Vijay be affected more by the  AIADMK-BJP alliance ...தவெகவை அதிமுக – பாஜக கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. அதனை தவெக கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதனால் வரும் தேர்தலில் தவெக தனித்து போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 13 நாட்கள் வரை உள்ளது. இந்த காலக்கட்டத்தில் எந்த மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம்.இதனால் தமிழக அரசியல் களம் என்பது தவெகவை சுற்றியே நகர்ந்து கொண்டு வருகிறது. தவெகவின் ஒவ்வொரு நகர்வுகளும் பிற கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விஜய் சென்னை அண்ணா நகரில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு சொத்தை விற்பனை செய்துள்ளார்.இந்த சொத்து விற்பனை ஒரு வாரத்துக்கு முன்பு நடந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள அந்த சொத்தை விஜய் ரூ.35 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சொத்தை விற்பனை செய்ய விஜய் தரப்பில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அவசரஅவசரமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘தி வீக்’ என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.அண்ணா நகரில் உள்ள சொத்தை போல் பிற இடங்களில் உள்ள இன்னும் சில சொத்துகளைவிஜய்விற்பனைசெய்யும்முடிவில்உள்ளதாககூறப்படுகிறது. விஜய் கோடீஸ்வரராக உள்ள நிலையில் திடீரென்று அவர் தனது சொத்துகளை விற்பனை செய்வது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தியபோது 2Vijay ADMK Alliance : அதிமுகவுடன் கூட்டணி இல்லை.! எடப்பாடி கனவில் மண்ணை  அள்ளிப்போட்ட விஜய் | Tvk Leader Vijay Says No Alliance With Aiadmk Bjp |  Asianet News Tamil காரணங்கள் தெரியவந்துள்ளன.அதாவது விஜயிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். இதுதொடர்பான மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ளது. ஏப்ரல் 20ம் தேதி விஜய் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது. பொதுவாக மனைவிக்கு விவாகரத்து வழங்கும்போது அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும். இந்த ஜீவனாம்சம் என்பது அவரது பெயரில் உள்ள சொத்து மற்றும் வருமானம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். இதனால் தனது பெயரில் உள்ள சொத்துகளை விற்பனை முன்கூட்டியே விற்பனை செய்துவிட்டால் அதற்கு சங்கீதாவால் உரிமை கோர முடியாது. இதனை மனதில் வைத்தே விஜய் சொத்துகளை விற்பனை செய்ய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது முதல் காரணமாகும்.2வது காரணம் என்னவென்றால் விஜய் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். அப்போது அவர் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டும். இந்த வேட்புமனு தாக்கலின்போது அவர் தனது சொத்து விவரங்களை வழங்க வேண்டும். அதில் விஜய் தனது சொத்து மதிப்புகளை குறைத்து காட்ட விரும்புவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தேர்தல் நேரத்தில் அவரது வருமானம், சொத்து விவரங்கள் பெரியஅளவில்பேசும்பொருளாகமாறலாம்.இதனால்அவர்தனதுசொத்துமதிப்பைகுறைத்து  காட்டநினைக்கிறார்.அதுமட்டுமின்றி இதற்கு முன்பு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் சிக்கலில் சிக்க கூடாது என்று விஜய் நினைக்கிறார். அதாவது 1991-96ம் ஆண்டு வரை தமிழகமுதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்சிறையிலும்அடைக்கப்பட்டார்.இருப்பினும் அவர்மரணமடைந்ததால்அந்தவழக்கில்முழுமையாகதண்டனைஅனுபவிக்கவில்லை.முன்னதாகஜெயலலிதாவழக்கில்முக்கியசாட்சியாகஅவரதுதேர்தல்பிரமாணபத்திரங்களும்,அதில்  குறிப்பிடப்பட்டு இருந்த சொத்து மதிப்பு மற்றும் வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான விவரங்களும் தான் இருந்தது. இதனால் ஜெயலலிதா போல் வம்பில் மாட்டி விடக்கூடாது என்று விஜய் நினைக்கிறார். இதனால் அவர் தனது சொத்து மதிப்பை குறைத்து காட்ட சில சொத்துகளை விற்பனை செய்ய முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close