fbpx
Others

விஜய்-‘எதையும் சமாளிப்போம், உண்மை வெளியே வரும்.

கரூர் சம்பவத்தால் களையிழந்து போயிருந்த பனையூர் கட்சி அலுவலகத்திற்கு விஜய் நேற்று மாலைவந்தார்.அவருடன்பொதுச்செயலாளர்புஸ்சிஆனந்தும்வந்தார்.கட்சி அலுவலகத்திற்குள் ஏற்கனவே, சிறையில் இருந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ்ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் அங்கே காத்திருந்தனர். கட்சி அலுவலகம் வந்த விஜய், அவர்களை பார்த்ததும்ஆறுதல் தெரிவித்தார்.இந்த சந்திப்பு மிகவும்உணர்ச்சிகரமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் விஜய் கேட்டறிந்தார். சிறையில் இருந்தஅனுபவத்தை மதியழகன் கண்ணீருடன் விஜய்யுடன் பகிர்ந்து கொண்டார்.அப்போது விஜய், ‘எதையும் சமாளிப்போம், உண்மை வெளியே வரும், பயப்படாதீர்கள், நான் இருக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள்நம்சொந்தங்கள்.அவர்களைஎப்போதும் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களை பற்றிய விவரங்களை எப்போதும் நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டும்’என்று விஜய் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.‘நான் விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பேன், அவர்களை நம்பிக்கையுடன் இருக்க சொல்லுங்கள்’ என்று விஜய் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close