விக்கிரவாண்டி– வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்..
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்
தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலுக்கு திமுக மட்டும் வேட்பாளரை அறிவித்த நிலையில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது. விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நா.புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் விடாமல் மணிக் கணக்கில் பேசிய திருச்சி சிவா! அசையாமல் கேட்ட தொண்டர்கள்! கருணாநிதி கூட இந்த ரிஸ்க்கை எடுத்தது இல்லையே! விக்கிரவாண்டி தேர்தல்.. ஸ்டாலின் எடுத்த ரிஸ்க் முடிவு? இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை ஜூன் 10-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் ஜூலை 10-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை தேர்தல் ஜூலை 10-ல் நடைபெறும் நிலையில் இன்று முதல் (ஜூன் 14) வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 17-ந் தேதி பக்ரீத் என்பதால் இந்த இரு நாட்களிலும் வேட்பு மனுக்கள் பெறப்படாது. ஜூன் 21-ந் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜூன் 24-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஜூன் 26-ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஜூலை 10-ந் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு ஜூலை 13-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி
இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் திமுக சார்பில் 9 அமைச்சர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அறிவீக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜககூட்டணிவேட்பாளர்கள்இன்னமும்அறிவிக்கப்படவில்லை. அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அமமுக, பாமக போட்டியிட தீவிரம் காட்டுகின்றன.