fbpx
Others

வால்பாறை கால்பந்து சங்கம் துணை முதலமைச்சருக்குகோரிக்கை–கவனத்திற்கு…

தமிழ்நாடுஅரசின்மாண்புமிகு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு, கோவைமாவட்டம்வால்பாறைபகுதியில்உள்ளசிறுவர்கள்மற்றும்வாலிபர்களின்விளையாட்டுவளர்ச்சிதொடர்பாகமுக்கியகோரிக்கைஒன்றுமுன்வைக்கப்பட்டுள்ளது.வால்பாறை பகுதியில் முன்னாள் விளையாட்டு வீரர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் வால்பாறை கால்பந்து சங்கம் மூலம், இப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தரமான கால்பந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சங்கத்தின் மூலம் நன்றாகத் தேர்ச்சி பெற்ற திறமையான வீரர்கள் பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, கால்பந்து விளையாட்டை வளர்த்தெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், வால்பாறை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி மைதானத்தில் கால்பந்து பயிற்சிக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் தற்போது செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மைதான பராமரிப்பு இல்லாமை, தரமற்ற மைதான நிலை, தேவையான வசதிகள் இல்லாத காரணத்தால், இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து வால்பாறை கால்பந்து சங்கம் சார்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், அவை இதுவரை பரிசீலனை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், திறமைமிக்க பல வீரர்கள் இருந்தும், சரியான பயிற்சி சூழல் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளியே கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, வால்பாறை நகராட்சி மைதானத்தை விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் தரமான விளையாட்டு மைதானமாக புதுப்பித்து வழங்க வேண்டும் என வால்பாறை கால்பந்து சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாண்புமிகு துணை முதலமைச்சரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பித்து, இந்த மனுவை பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தகோரிக்கைநிறைவேறினால், மலைப்பகுதியான வால்பாறையில் இருந்து மேலும் பல திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி, மாநிலம் மற்றும் தேசிய அளவில் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கையும் விளையாட்டு ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. கோவை மாவட்ட புகைபடகலைஞர் ஜெயப்பிரகாஷ் தே

Related Articles

Back to top button
Close
Close