fbpx
Others

வந்தே பாரத் ரயில்கள் 320 கி.மீ வேகத்தில் விரைவில் வருகின்றன…!

vande-bharat-4-0-to-launch-in-18-months-confirms-minister-ashwini-vaishnawநாடு முழுவதும் 76 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது. இந்த நிலையில், அடுத்த 18 மாதங்களில், வந்தே பாரத் 4.0 வெர்ஷன் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது பயணிகள்இடையேஎதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டன. வந்தே பாரத் ரயில்களில் இருந்த அதி நவீன சொகுசு வசதிகள் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.வந்தே பாரத் ரயிலைப் பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி, தானியங்கி கதவுகள், சொகுசு இருக்கைகள், விசாலமான ஜன்னல்கள், வரவிருக்கும் ரயில் நிலையங்களை பற்றிய முன்னறிவிப்பு, சென்சார் அடிப்படையில் இயங்கும் வாட்டர் டேப், பயோ வெஸ்ட் டாய்லட், ரீடிங் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.வந்தே பாரத் ரயில்களின் அதிவேகம், சொகுசு பயணம் ஆகியவை காரணமாகபல்வேறுவழித்தடங்களிலும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 76 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை-நாகர்கோவில், சென்னை-நெல்லை, சென்னை-கோவை, சென்னை-பெங்களூர்-மைசூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.வந்தே பாரத் ரயில்களைப் பொறுத்தவரை விரைவில் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் முடிந்துள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எந்த ரூட்டில் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், வந்தே பாரத் 4.0 வெர்ஷன் அடுத்த 18 மாதங்களில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பது பயணிகள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறும் போது, “தற்போது வந்தே பாரத் ரயில் வெர்ஷன் 3.0 இயக்கப்பட்டு வருகின்றன. ரயிலின் தரம், வேகம் உள்ளிட்டவை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.” வந்தே பாரத்ரயில்களைப் பொறுத்தவரை வெறும் 52 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் உள்ளது. வந்தே பாரத் ரயில்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.* அடுத்த 18 மாதங்களில் வந்தே பாரத் 4.0 ரயில்கள் தயாரிக்கப்படும். வந்தே பாரத் 4.0 ரயில்களைப் பொறுத்தவரை மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இருந்தாலும் பாதுகாப்பு கருதி 320 கி.மீ வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படும். * வரும் 2047ஆம் ஆண்டிற்குள், 7 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு சிறப்பு ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ரூட்டில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.* இந்தியாவில் தயாரிக்கப்படும் ரயில் எஞ்சின்கள் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் தினமும் சுமார் 2 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். * புல்லெட் ரயில் திட்டம் முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், நாட்டில் சுமார் 1,300 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு புதுப் பொலிவு பெற்று வருகின்றன” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close