fbpx
Others

வசூலில் பங்கு பிரிப்பதில் பிரச்சனை..? பாதிப்பது பொதுமக்களா….?

சாலையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது யார்?
தண்டல் வசூல் செய்வது,யார்? நகராட்சி நிர்வாகமா? நெடுஞ்சாலைத்துறையா? உதவி உட்கட்ட பொறியாளர் கேள்வி…?

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிகுட்பட்ட போக்குவரத்து சாலைகளில்
அண்ணா சாலை முக்கியமான சாலையாகும்.இந்த சாலையில் அண்ணா சிலை உள்ளது, முக்கிய அலுவலகங்கன இந்தியன் வங்கி, இபி ஆபிஸ், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு நிதி உதவி பெறும் கோவிந்தராஜலு செட்டியார் மேல்நிலைப்பள்ளி,ஆஞ்சநயர் கோயில் மற்றும் முக்கிய தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.காலை முதல் இரவு 11 மணி வரை,மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகமுள்ள பகுதியாகும்,ஒவ்வொரு நாளும் மூன்றாயிரத்திற்க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் இச்சாலையில் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் இச்சாலையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் நுழைவாயில் முன்பு இருபுறமும் தள்ளு வண்டியில் சாலையை ஆக்கிரமித்து காலை மற்றும் மாலை நேரங்களில் பானி பூரி ,சிற்றுண்டி டிபன் கடை வியாபாரம் படு ஜோராக நடைபெற்று வருகிறது.இக்கடைகளுக்கு வந்து செல்லும் நபர்கள் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை மணி கணக்கில் நிறுத்தி வைக்கின்றனர் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன போன்ற அவசர வாகனங்கள் செல்வதற்கு தடைபடுகிறது பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ மாணவியர்கள் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்யும்போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் மோதி கீழே விழுகின்றனர்.அவ்வப்போது இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன.மேலும் பானிபூரி மற்றும் டிபன் கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள், ஆட்டுபோட்டி எலும்பு மற்றும் இலைகளை சாலை மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகிலேயே வீசி செல்கின்றனர் தேவைக்கு ஏற்ப தண்ணீரை அருகில் உள்ள நகராட்சி பூங்காவிலேயே எடுத்து பயன்படுத்தி வருகின்றனர் நகராட்சி ஊழியர்கள் கடைக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதித்து வருகின்றனர்.இப்படி இருக்க இந்த சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த போது நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்டம் ஆற்காடு உட்கோட்டம் உதவி உட்கோட்ட பொறியாளர் க.சரவணன் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தள்ளு வண்டியில் கடைகளை வைத்து நடத்துவதற்கு கடைக்காரரிடம் ரகசிய உடன்படிக்கை செய்து அனுமதித்து வருகிறார் என்றனர்..அலுவலகம் முன்பு உள்ள இக்கடைகளை அகற்றுவதற்கு அவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவே  >>>>>> இல்லை காரணம் கடைக்காரர்களிடம் மாத, மாதம் தேவையான தொகையை வாங்கிக் கொள்கிறார் மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில்அவருக்குதேவையானபானிபூரி,ஆட்டுபோட்டி,இட்லிதோசை,வடைஇலவசமாகவாங்கிதின்னுகிறார்என்கின்றனர்.இச்சம்பவம் குறித்து உதவி உட்பட்ட பொறியாளர் க.சரவணனிடம் விசாரித்த போது உடனே கடைகளை அகற்ற முடியாது அலட்சியமாக பதில் சொல்கிறார். கடைகளை அகற்ற வேண்டுமானால் நகராட்சி ஆணையரிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் அகற்ற முடியும் இலவசமாக இட்லி தோசை வாங்கி தின்னவில்லை தினமும் என் வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்துதான் சாப்பிடுகிறேன்.,சொல்லுகிறவர்கள் ஆயிரம் சொல்வார்கள் என்றார்.நகராட்சி ஆணையர் வெங்கட் லட்சுமணன் பன்முகத்தன்மை கொண்டவர்,எப்பொழுதுமே அதிகார தோரணையுடன் நடந்து கொள்வார் அவர் வலை வீசினால் வானத்தில் உள்ள விண்மீனும் சிக்கிவிடும் ராசியானவர் அவரிடம் விசாரித்தோம் நகராட்சி நிர்வாகத்திற்கும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் தள்ளுவண்டி கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கடைகளை அகற்றுவதற்கு உதவி கோட்ட பொறியாளர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவருடைய அலுவலகம் முன்பாகத் தானே இருக்கிறது நாங்கள் என்ன? செய்ய முடியும் என்றார். நகராட்சி ஆணையர் வெங்கட் லட்சுமணன் இப்படி பதில் சொல்லி இருக்கிறார் என்று உதவி கோட்ட பொறியாளர் க.சரவணனிடம் கேட்டபோதுஏலம் விட்டு தண்டல் வசூல் செய்கிறவர்கள் யார்? நகராட்சி நிர்வாகமா? நெடுஞ்சாலைத்துறையா? என்ற கேள்வி எழுப்பினார் அப்படி பார்க்க போனால் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைகளை ஆக்கிரமித்து வைத்துள்ள அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும்
நகராட்சி நிர்வாகத்தினர் ஏதோ ஒரு பதிலை சொல்லி இருக்கிறார்கள்எதுவாக இருந்தாலும் அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு தான் முடிவு செய்யப்படும் தற்காலிகமாக கடைகளை தள்ளி வைத்துக்கொள்ள சொல்லுகிறேன் என்றார்சொற்ப வருமானத்திற்கும்
ஆசைப்பட்டு வருமானம் போய்விடுமே? என்ற நோக்கத்தில்யாரோ? அடிபட்டு சாகிறான் யாருடைய தாலியோ? அறுக்கப்படுகிறது எவன் செத்தால்எனக்கென்ன என்பது போல
அதிகாரிகளின் பதில் அமைந்திருக்கிறது இருவருமே ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் அல்ல என்பதுபுலனாகிறதுஎல்லாத்துறைகளுமேமக்களின்நலம்சார்ந்துதான்உருவாக்கப்பட்டிருக்கிற
துறை சார்ந்த அதிகாரிகள் இப்படிபொறுப்பற்ற நிலையில் பதில் சொல்லுவது ஏற்புடையதல்ல? ஆபத்து விபத்துகளை தவிர்க்க போற்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது அதிகாரியின் நடவடிக்கை என்னவாயிருக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Back to top button
Close
Close