லோக்சபா சபாநாயகர் பதவி — பாஜக கூட்டணிக்கா..? ‛இந்தியா’ கூட்டணிக்கா..?
லோக்சபா சபாநாயகரை பதவிக்கு பாஜக கூட்டணியில் பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இடையே போட்டி உள்ளது. இதற்கிடையே தான் சபாநாயகர் பதவி தொடர்பாக பாஜக கூட்டணியை எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணி மிரட்டி பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால் நடந்து முடிந்த
லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. 370 தொகுதிகளில் வெல்வோம் என்று இலக்கு நிர்ணயித்த பாஜகவுக்கு இந்த லோக்சபா தேர்தலில் பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது. ஏனென்றால் பாஜக 240 தொகுதகிளில் மட்டுமே வென்றது. இதனால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. இதனால் 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் களமிறங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 16 எம்பிக்கள், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்பிக்கள் உள்பட 52 எம்பிக்களின் தயவில் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதோடு 3வது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார். கடந்த 2014, 2019 தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கினாலும் கூட அந்த கட்சிக்கு லோக்சபாவில் தனி மெஜாரிட்டி என்பது இருந்தது. ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் மாறிப்போய் உள்ளது. வரும் 5 ஆண்டுகள் பாஜக மத்தியில் ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளை நம்பி தான் இருக்க வேண்டும். இதையடுத்து தான் கூட்டணி கட்சிகளுக்கு இந்த முறை மத்திய அமைச்சரவையில் கடந்த 2 முறையை காட்டிலும் அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. நிதிஷ் OR சந்திரபாபு நாயுடு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியுமா? வாய்ப்பு இருக்காமே.. எப்படி தெரியுமா? இத்தகைய சூழலில் தான் ஒருவழியாக பாஜக, தனது கூட்டணி கட்சிகளை சமாளித்து மத்திய அமைச்சரவையை அமைத்துவிட்டது. அடுத்ததாக பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் இருக்கும் பெரிய சவால் என்பது லோக்சபா சபாநாயகர் பதவியாகும். இந்த பதவி என்பது மிகவும் முக்கியம். அதாவது லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு, கட்சித்தாவல் தடை சட்டத்தின் மீது ஒரு எம்பி மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முக்கிய அதிகாரம் சபாநாயகரிடம் தான் இருக்கும். லோக்சபா சபாநாயகர் யார்? மோடி ‛டிக்’ அடிக்கப்போகும் பிரபல நடிகரின் மகள்.. யார் இவர் தெரியுமா? இன்னும் ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் மத்திய பாஜகவின் ஆட்சியின் பெரும்பான்மைக்கு சிக்கல் ஏற்படும்போது ஆட்சியை கவிழ்ப்பது மற்றும் காப்பாற்றும் அதிகாரம் என்பது சபாநாயகருக்கு தான் இருக்கும். இதனால் தான் இந்த சபாநாயகர் பதவி மீது பாஜக கூட்டணியில் பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்,நிதிஷ்குமாரின்ஐக்கியஜனதாதளம்கட்சிகள்குறிவைத்துள்ளன.ஆனால்பாஜகசபாநாயகர்பதவியைதக்கவைத்துகொள்ளவிரும்புகிறதுஅதோடு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரை சமதானப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சபாநாயகராகும் நடிகர் என்டி ராமராவின் மகள்? சந்திரபாபு நாயுடுக்கு பாஜக ‛செக்’.. எப்படி தெரியுமா? இத்தகைய சூழலில் தான் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் சபாநாயகர் பதவி விவகாரத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்கு காரணம் ‛இந்தியா’ கூட்டணியாகும். அதாவது எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணிக்கு தற்போது லோக்சபாவில் 234 எம்பிக்கள் உள்ளன. இதனால் துணை சபாநாயகர் பதவியை பெற ‛இந்தியா’ கூட்டணி விரும்புகிறது. ஆனால் பாஜகவோ சபாநாயகர் பதவியை தாங்களும், துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் தங்களுக்கு துணை சபாநாயகர்
பதவியைவிட்டுகொடுக்கவேண்டும்.இல்லாவிட்டால்லோக் சபாநாயகர்தேர்தலில்வேட்பாளரைநிறுத்துவோம் என ‛இந்தியா’ கூட்டணிபாஜகவைமிரட்டதிட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் போட்டியின்றி சபாநாயகரை தேர்வு செய்து விடலாம் என்று பாஜக கருதி வந்த நிலையில் ‛இந்தியா’ கூட்டணியின் இந்த முடிவு பாஜகவை கலங்க வைத்துள்ளது. தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை தொடர்ந்து முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். அதன்பிறகு ஜுன் 26ம் தேதி லோக்சபா சபாநாயகர்தேர்தல்நடைபெறஉள்ளது.இதில்எதிர்க்கட்சிகள்வேட்பாளரைநிறுத்தினால்தேர்தல் நடத்தப்படும்.எதிர்க்கட்சிகள்வேட்பாளர்நிறுத்தாவிட்டால்ஆளும்பாஜகதலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணி போட்டியின்றி ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்யும். இத்தகை சூழலில் தான் துணை சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்காவிட்டால் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளரை களமிறக்குவோம் என எதிர்க்கட்சிகள் பாஜக மிரட்ட திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.