fbpx
Others

நேட்டோ – ரஷியா இடையே நேரடி சண்டை ஏற்பட்டால்…….?

அது 3-ம் உலகப்போர் தான் --- ஜோ பைடன்-அமெரிக்க அதிபர்

உக்ரைன் மீது ரஷியா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
ஆனால், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, நேட்டோ படைகள் ரஷியாவுக்கு எதிராக நேரடியாக போரிடவில்லை. உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை மட்டுமே வழங்கி வருகிறது.
தங்கள் நாட்டின் வான் எல்லையை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பிற்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், நேட்டோ – ரஷியாவுக்கு இடையே நேரடி சண்டை ஏற்பட்டால் அது 3-ம் உலகப்போர் தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நேட்டோ எல்லையின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேட்டோ ஒன்றிணைத்து மற்றும் இரும்பு பலம்கொண்டு நாங்கள் பாதுகாப்போம்.
ஆனால், நாங்கள் உக்ரைனில் ரஷியாவுக்கு எதிராக சண்டையிடமாட்டோம். நேட்டோ – ரஷியாவுக்கு இடையே நேரடி சண்டை ஏற்பட்டால் அது 3-ம் உலகப்போராகத்தான் இருக்கும். அவ்வாறு நிகழ்வதை நாம் தடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button
Close
Close