ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு…?

சோளிங்கர் அருகே ஊராட்சி மன்ற நிர்வாகத்தை தன் கையில் வைத்து கொண்டு செயல்படும் தனிநபரை கண்டித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட ஆறு கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்புஅமர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டதால்பரபரப்பு*ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாராஞ்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ரவி என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் உள்ளார்..இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ரவியின் ஆதரவாளரான அசோக் என்பவர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினை தன் கையில் எடுத்துக்கொண்டு அவரே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் தன்னிச்சையாக அசோக் என்பவருக்கு பணிகளை மேற்க் கொள்வதாகவும் .திட்டப் பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களை அணுகாமல் தன்னிச்சையாக செயல்படுவதை குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜி உட்பட கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற அலுவலக நுழைவாயில் அமர்ந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இதன் மீது அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.