ராணிப்பேட்டை–பத்திரிக்கை நிறுவனங்கள் பெயரை பயன்படுத்தி தீபாவளி வசூல் வேட்டை?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறை. தீயணைப்பு துறை, வருவாய்த்துறை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பத்திரிகையாளர் சங்கங்களின் பெயரை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை பயமுறுத்தி ஏமாற்றி தீபாவளி வசூல் வேட்டையை நடத்தியுள்ளனர் சிலர். இதில் என்ன வேடிக்கை என்றால் நாங்கள் இந்தப் பத்திரிகை சங்கத்தில் இந்தந்த பதவி வகித்து வருகிறோம் என்று எந்த ஒரு பத்திரிகை நிறுவனத்திலும் பணிபுரியாமல்போலியாக சில பெயர்களை பட்டியலாக தயார் செய்து அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத நிறுவனங்களின் பெயரை எல்லாம் எழுதிக் கொடுத்து இத்தனை பேர் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் யாரும் உங்களிடம் வர மாட்டார்கள் உங்களுக்கு தொந்தரவு தர மாட்டார்கள்.அதனால் நீங்கள் கொடுக்கும் அன்பளிப்பு பொருட்களை பொறுப்புகளை வகிக்கும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் அவர்களிடம் கொடுத்து விடுகிறோம் என்று கூறி வசூல் செய்துள்ளனர். இப்படி ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் 60 க்கும் மேற்பட்ட பட்டாசு பாக்ஸ்கள், பணம், இனிப்பு வகைகள் போன்றவற்றை வசூல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் எதன் அடிப்படையில் இவர்களிடம் பட்டாசு, இனிப்புகள் வழங்கி உள்ளார்கள்.போலி பத்திரிகையாளர்கள் உருவாக இது போன்ற அரசு அதிகாரிகள் தான் முழுக்க முழுக்க காரணம். உங்களிடம் பத்திரிகையாளர் என ஒருவன் வந்து கூறும் போது அவர் பணியாற்றும் நிறுவனத்தின் ஐடி கார்டு இருக்கிறதா என பாருங்கள். ஆனால் அதை பார்ப்பதில்லை. யாரோ ஒருவன் வந்து பத்திரிகை சங்கம் நடத்துகிறோம். எங்கள் சங்கத்தில் 60 பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறினால் பயந்து விடுகிறார்கள். இப்படியாக பத்திரிகை சங்கத்தின் பெயரைச் சொல்லி அடாவடி வசூலில் ஈடுபடும் சங்கத்தை கண்டறிந்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.இனிமேல் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பத்திரிகை சங்கங்களின் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடத்தும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பலரும் கவனிக்க தவறிய விஷயம் என்னவென்றால் ஒருபத்திரிகைஎன்பதுமத்தியதொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் (Ministry of Information and Broadcasting, Government of India) கீழ் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுவது. அதன் ஆசிரியர்அல்லதுவெளியீட்டாளரிடம் பெறப்படும் அடையாள அட்டை வைத்திருப்பவரே பத்திரிகையாளராக கருதப் படுவார். பத்திரிகையின் அடையாள அட்டை இல்லா மல் சங்கம் என்ற பெயரில் ஏதோ ஒரு பெயரை வைத்துக்கொண்டு வருபவர்கள் பத்திரிகையாளர்கள் கிடையாது. இப்படிப்பட்ட சங்கங்கள் மாநில அரசின் பதிவுத்துறை மூலம் சொசைட்டி ஆக்ட் இன் கீழ் (So-cieties Registration Act, 1860) பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு சங்கங்களை பதிவு செய்துவிட்டு நாங்களும் பத்திரிகையாளர் என்று சுற்றி வருபவர்கள் பத்திரிகையாளர்கள் அல்ல.அதனால் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமாலும், மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யாமல் சங்கம் என்ற பெயரில் சுற்றி வரும் போலி ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கு கப்பம் கட்டும் அரசு துறை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். என்ன செய்யப்போகிறார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மான் ஜமாலும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவும்?