fbpx
Others

ராணிப்பேட்டை-கலவை அருகே விவசாயின் வீட்டில் கொள்ளை…

கலவை அருகே விவசாயின் வீட்டில் பீரோவில் இருந்த 17 சவரன் உட்பட ஒரு லட்சம் ரொக்க பணம் கொள்ளை – போலீசார் விசாரணை.ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள கன்னிகாபுரம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் முருகன் (44) விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (36) இவர்களுக்கு அகல்யா (18), பூவரசன் (17) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் வீட்டின் முன்பக்க கதவு பூட்டி விட்டு ஞாபக மறதியில் பின் பக்க கதவு பூட்டாமல் வீட்டின் வராண்டாவில் குடும்பத்துடன் உறங்கி உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை சிலிண்டர் வாங்க பணம் எடுக்க பீரோவை திறந்தபோது பீரோவில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரொக்க பணம் காணாமல் போனதை கண்டு செல்வி அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக வாழைப்பந்தல்காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் ஆய்வாளர் கவிதா மற்றும் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நகையின் காலி பையை வீட்டின் பின்பக்க நிலத்தில் வீசி சென்றுள்ளார்.பின் பக்க கதவு திறந்து இருப்பதை நோட்டமிட்டு உள்ளே புகுந்த திருடன் பீரோ உடைக்காமல் சாவி வைத்துள்ள இடத்தை அறிந்து சத்தமில்லாமல் திருடி மீண்டும் பீரோவை லாக் செய்து சென்றுள்ளான்.

Related Articles

Back to top button
Close
Close