Others
ராணிப்பேட்டை –அகத்தியர் அறக்கட்டளை சார்பில் அன்னதான விழா..!

ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு பேருந்து நிலையத்தில் கோவில் உழவாரப்பணி மற்றும் ஸ்ரீ அகத்தியர் அறக்கட்டளை சார்பில் 6 வது மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக அங்கு வைக்கப்பட்ட அகத்தியர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, அன்னதானத்திற்காக வைக்கப்பட்ட உணவுகளை படைத்து பூஜை செய்த பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமாக விநியோகிக்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், கோவில் உழவாரப் பணியாளர்கள், சிவனடியார்கள், சிவ பக்தர்கள் , மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக ஜெகன், விஜய் கண்ணா, சரவணன், வஉசி.சீனு , ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..