ராகுல் காந்தி –தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு…? con. part-2
போலி முகவரியில் 40,009 வாக்காளர்கள்* வாக்காளர் பட்டியலில் உள்ளது போல் முகவரி இல்லை* சில வாக்காளர்களுக்கு முகவரிக்கு பதில் 0,-,#, இன்னும் சில அடையாளக்குறிகள் இடம் பெற்று இருந்தன.* வாக்காளர்கள் முகவரி சரிபார்க்கப்படவில்லை.ஒரே தொகுதியில் 1,00,250 ஓட்டுகள் திருட்டு 5 வகையான ஓட்டு திருட்டு * போலி வாக்காளர்கள் 11,965 * போலி, தவறான முகவரி 40,009 ஒரே முகவரியில் வாக்காளர்கள் 10,452* புகைப்படம் இல்லாத வாக்காளர் 4,132 * படிவம் 6 தவறாக பயன்படுத்தியது 33,692 முறைகேடுகண்டுபிடிக்கப்பட்டது எப்படி? * காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்திய ஆய்வில் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதியில் 16
தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 9 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதியில் மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதி முடிவு மட்டுமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.* இதனால் மக்களவை தேர்தலில் மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.மிகப்பெரிய உண்மை மறைப்பு* மின்னணு வாக்காளர் பட்டியல் தராததால் காகித அடிப்படையில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் சரிபார்க்கப்பட்டனர்.* வாக்காளர் பட்டியலைஇயந்திரங்கள்மூலம்சரிபார்க்கும் வசதியை தேர்தல் ஆணையம் தரவில்லை.அதனால் 7 அடி உயரத்திற்கு வாக்காளர் பட்டியல் பிரிண்ட் எடுக்கப்பட்டு மறைக்கப்பட்டு இருந்த மிகப்பெரிய உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.* 2024 பெங்களூரு மத்திய தொகுதி தேர்தல்மன்சூர்அலிகான்(காங்கிரஸ்) Vs பிசி மோகன் (பா.ஜ)பதிவான வாக்குகள்காங்கிரஸ் 6,26,208 பா.ஜ 6,58,915 வித்தியாசம்32,707 மகாதேவ்புராசட்டப்பேரவை தொகுதிகாங்கிரஸ் 1,15,586பா.ஜ 2,29,632வித்தியாசம் 1,14,046* ஒரே வாக்காளருக்கு 4 இடத்தில் ஓட்டு ராகுல்காந்தி வெளியிட்ட ஆதாரத்தில் ஆதித்யா வத்சவா என்ற வாக்காளருக்கு கர்நாடகாவில் மகாதேவ்புரா சட்டப்பேரவையில் 2 இடத்திலும், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கிழக்கு தொகுதியில் ஒரு இடத்திலும்,
மகாராஷ்டிரா மாநிலம் ஜோகேஸ்வரி கிழக்குதொகுதியில் ஒருஇடம் என்று 4 இடத்தில் வாக்கு இருந்த பட்டியலை ராகுல்காந்தி வெளியிட்டார்.ராகுல் கையெழுத்து போட்ட உறுதிமொழி கடிதம் கொடுத்தால் உடனே விசாரிப்போம் கர்நாடகா தேர்தல் முறைகேடு குறித்து ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்த சில நிமிடங்களில் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் , ராகுல்காந்திகையெழுத்திட்டஉறுதிமொழியுடன் கா்நாடகா வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களைப் பகிர்ந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில்,’ டெல்லியில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.இந்த புகார் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக, 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(பி) இன் கீழ் இணைக்கப்பட்ட பிரகடனம்/பிரமாணத்தில் கையொப்பமிட்டு திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலும் கர்நாடகாவில் எம்பி தேர்தல் தொடர்பாக புகார் மனு அளிக்கும் காலக்கெடு ஏற்கனவே முடிந்து விட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராகுல்காந்தியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ராகுலின் குற்றச்சாட்டு தவறானது என்றால் தேர்தல் ஆணைய விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.* நான் சொல்வதை சத்திய வாக்காக எடுத்துக்கொள்ளுங்கள் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு ராகுல்காந்தி பதில்தேர்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி கையெழுத்திட்டு புகார் அளித்தால் விசாரிப்பதாக கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார். இதற்கு ராகுல்காந்தி உடனே பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘நான் ஒரு அரசியல்வாதி. மக்களுக்கு நான் சொல்வது என்னுடைய வார்த்தை, கடமை. நான் அதை எல்லோரிடமும் பகிரங்கமாகச் சொல்கிறேன். அதை ஒரு சத்தியமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது அவர்களின் தரவு, நாங்கள் அவர்களின் தரவைக் காட்டுகிறோம். இது எங்கள் தரவு அல்ல. இது தேர்தல் ஆணையத் தரவு. சுவாரஸ்யமாக, அவர்கள் தகவலை மறுக்கவில்லை. ராகுல் காந்தி பேசும் வாக்காளர் பட்டியலில் அவர்கள் தவறு என்று சொல்லவில்லை. நான் சொன்னது தவறு என்று நீங்கள் சொல்லவில்லை? ஏனென்றால் உங்களுக்கு உண்மை தெரியும். நாடு முழுவதும் நீங்கள் இதைச் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்றார்.3 மாநிலங்களிலும் வாக்கு திருட்டு ராகுல்காந்தி கூறுகையில், ‘கர்நாடாகாவில் நடந்தது போல் மகாராஷ்டிரா, அரியானா, மத்தியப்பிரதேச தேர்தல்களிலும் வாக்குத்திருட்டு நடந்துள்ளது.மகாராஷ்டிராவில் வெளியான தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன என்ற எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தின. மகாராஷ்டிரா வாக்காளர்களின் எண்ணிக்கை அங்குள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையை விட அதிகமாக இருந்தது. இது மிகவும் ஆச்சரியமான உண்மை. மேலும் மாலை 5:30 மணிக்குப் பிறகு வாக்காளர் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. அனைவரும் அதைப் பார்த்தார்கள். அங்கு 1 கோடி வாக்காளர்கள் புதிதாக தோன்றினார்கள். தேர்தல் ஆணையத்திடம் இதுபற்றிய தரவுகளை வழங்கியும் அவர்கள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.* பொறுப்பற்ற செயல் பா.ஜ கண்டனம் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ சார்பில் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பொறுப்பற்ற மற்றும் வெட்கமற்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை ஒரு மோசடி அமைப்பு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மூலம் வெட்கமின்மையின் அனைத்து வரம்புகளையும் அவர் தாண்டி விட்டார். 2014 முதல் பிரதமர் மோடி தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறார்.அதையும் ஒரு மோசடி என்று நீங்கள் (ராகுல் காந்தி) அழைக்கிறீர்கள். மோடியின் பணி, நேர்மை மற்றும் அவரது தலைமையின் கீழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக அவருக்கு வாக்களித்த நாட்டு மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.நீங்கள் அவதூறு வழக்குகளில் ஜாமீன் பெற நாடு முழுவதும் சுற்றித் திரிகிறீர்கள். ராகுல் காந்தியின் பேச்சுக்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் பொறுப்பற்றவர், அரசியலமைப்பு அமைப்பைப் பற்றி என்ன பேசுவது என்று கூட அவருக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தங்கள் ஆணையை வழங்காததால் விரக்தி மற்றும் கோபத்தால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உங்கள் இத்தகைய நடத்தை, குணம் காரணமாக மக்கள் உங்களுக்கு (காங்கிரசுக்கு) ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவிலும் மோசடி உறுதி செய்யப்பட்டது எப்படி?* மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் 5 ஆண்டுகளை விட மக்களவை தேர்தல் முடிந்த அடுத்த 5 மாதத்தில் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.* 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்ராவில் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.* மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தினத்தில் மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவீதம் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.* புதிய வாக்காளர் பெயரை சேர்க்கும் படிவம் 6 தவறாக பயன்படுத்தியது 33,692 வாக்காளர்கள்70 வயது கொண்ட சுகுணா ராணி என்ற வாக்காளர் 2 மாதத்தில் தனது பெயரை படிவம் 6ஐ பயன்படுத்தி 2 இடங்களில் சேர்த்துள்ளார்.* சுகுணா ராணி 2 இடங்களிலும் மக்களவை தேர்தலில் தனது வாக்கை செலுத்தி உள்ளார்.* வாக்காளர் பட்டியலில் சுகுணா ராணியின் பெயர் மற்றும் புகைப்படம் சற்று மாறி உள்ளது.இந்த காரணத்திற்காகத்தான் தேர்தல் ஆணையம் சிசிடிவி பதிவுகளை அவசர அவசரமாக அழித்து வருகிறது.* மோடி பதவி விலக வேண்டும் கர்நாடகா முதல்வர் கோரிக்கைவாக்காளர் மோசடியை ராகுல்காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளதால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’ மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் பரவலாக வாக்கு திருட்டு எவ்வாறு நடந்தது என்பதை வலுவான ஆதாரங்களுடன் ராகுல்காந்தி அம்பலப்படுத்தியுள்ளார். பொதுமக்களின் பெரும் கோபம் இருந்தபோதிலும், மோடி தேர்தல் மோசடி மூலம் மட்டுமே மீண்டும் ஆட்சிக்கு வந்தார். இதற்கு ராகுல் காந்தி வெளியிட்ட ஆவணங்கள் தெளிவான சான்றாக நிற்கின்றன. தேர்தல் ஆணையத்தை தவறாகப் பயன்படுத்தி, வாக்குகளைத் திருடி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மோடி பிரதமரானார். பதவியில் நீடிக்க அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார். ராகுல் முற்றிலும் அமைதியை இழந்து விட்டார்: தர்மேந்திரபிரதான்தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான் வெளியிட்டுள்ள பதிவு: சித்தாந்த ரீதியாக வெற்று காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பு நிறுவனங்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. ராகுல் முற்றிலும் அமைதியை இழந்துவிட்டார். ஜனநாயகத்தில், மக்களின் முடிவு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மேலும் தேர்தல் ஆணையத்தைத் தாக்குவதன் மூலம், ராகுல் காந்தி பொதுமக்களின் விவேகமான முடிவை அவமதிக்கிறார். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து புகார் அளிக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியையும் அழைத்தபோது ராகுல் காந்தி எங்கே இருந்தார்? அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்தியா கூட்டணியின் எந்தக் கட்சியோ தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. இந்த இரட்டை நிலைப்பாடு இனி வேலை செய்யாது. இவ்வாறு தெரிவித்தார்.ராகுல்காந்திக்கு கர்நாடக தேர்தல் அதிகாரி நோட்டீஸ்ராகுல் காந்திக்கு கர்நாடக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அன்புகுமார் எழுதிய கடிதத்தில், ‘வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக பராமரிக்கப்படுவதை காங்கிரஸ் கட்சியினர் அறிவார்கள். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. நவம்பர் 2024 வாக்காளர் பட்டியலின் வரைவு நகல் வழங்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 2025ல் வழங்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் எந்த
ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் வாக்காளர் பட்டியலில்மோசடிநடந்திருப்பதாகக்குற்றம்சாட்டியுள்ளார்.தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதை ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தப்பட்டதில் ஆட்சேபனைகள் இருந்தால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 1960ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் 20(3)(பி) பிரிவின் கீழ் கையொப்பமிட்டு அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்க உதவும். போலியான தகவல் கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டப்படி தண்டனைக்குரியது’ என்று கூறியுள்ளார். கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக அன்புகுமார் பதவியேற்று இரு வாரங்கள் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.* மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கைராகுல்காந்தி குற்றம் சாட்டியதும் மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எந்த மேல்முறையீட்டையும் தாக்கல் செய்யவில்லை. மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல்களின் வரைவுகள் ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் பிரதிநிதியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியல்கள் செப்டம்பர் மாதம் பகிரப்பட்டன. இந்த பட்டியல்களுக்கு எதிராக கலெக்டர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் மனுக்களை தாக்கல் செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிஅறிக்கை ராகுல்காந்தி குற்றம் சாட்டியதும் மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எந்த மேல்முறையீட்டையும் தாக்கல் செய்யவில்லை. மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல்களின் வரைவுகள் ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் பிரதிநிதியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியல்கள் செப்டம்பர் மாதம் பகிரப்பட்டன. இந்த பட்டியல்களுக்கு எதிராக கலெக்டர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் மனுக்களை தாக்கல் செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட சத்தியபிரமாண அறிக்கையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.ராகுலிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கேட்பது ஏன்? கபில்சிபல் கேள்விமாநிலங்களவை எம்பி கபில்சிபல் கூறுகையில், ’கர்நாடகாவில், குறிப்பாக ஒரு தொகுதியில் மட்டும் நடந்த தேர்தல் கையாளுதலின் தன்மை குறித்து ராகுல் காந்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தினார். இது நமக்கு என்ன சொல்கிறது? நாடு முழுவதும் மிகப்பெரிய தேர்தல் மோசடி நடைபெற்று வருவதை இது தெளிவாகக் குறிக்கிறது. மகாராஷ்டிராவில், வாக்குகளைச் சேர்ப்பது; கர்நாடகா மற்றும் டெல்லியில், இப்போது நமக்குத் தெரியும், வாக்குகளை கையாளுதல்; பீகாரில், வாக்குகளை நீக்குவது. இதுதான் மோசடியின் அளவு மற்றும் தன்மை. இந்த உண்மைகளை முன்வைத்ததற்காகவும், இந்த நாட்டு மக்களுக்கு முன் வைக்கும்தைரியம் கொண்டதற்காகவும் ராகுல் காந்தி தேசத்திற்கு ஒரு மகத்தான சேவையைச் செய்துள்ளார் என்று நான் நம்புகிறேன். ஒரு உண்மையான தேசபக்தரால் மட்டுமே அதைச் செய்ய முடியும். நமது ஜனநாயகத்திற்கு என்ன நடக்கிறது என்பதையும், தேர்தல் ஆணையம் அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தின் முகவராக மாறியுள்ளது என்பதையும் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மைகள் வெளியிடப்பட்டபோது, நாங்கள் முழு விசாரணை நடத்தி மக்கள் முன் உண்மைகளை வைப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் ராகுல்காந்தியை பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கச் சொல்கிறது. அத்தகைய பிரமாணப் பத்திரத்தை தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்’ என்றார்.