fbpx
Others

ராகுல் காந்தி–தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு..?

வாக்காளர் மோசடி குற்றச்சாட்டு: சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுமாறு  ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் | Sign under oath, Karnataka CEO  asks Rahul ...வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார். அதில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்து இருப்பதாகவும், ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதும், ஒரு வாக்காளருக்கு 4 வாக்குச்சாவடியில் ஓட்டு இருக்கும் ஆதாரத்தையும் ராகுல்காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார். பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னை குறித்து விவாதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.இந்த சூழலில் நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார். அதன் விவரம் வருமாறு: பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியில் 2024ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான், பா.ஜ வேட்பாளர் பி.சி. மோகனிடம் 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதி உள்பட கர்நாடகாவில் உள்ள 28மக்களவைதொகுதிகளில் நாங்கள் எடுத்த கணக்குப்படி 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் 9 தொகுதிகள் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. இது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆய்வில் பெங்களூரு மத்திய மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவைத்தொகுதியில்ஒருலட்சத்துக்கும்மேற்பட்டபோலிவாக்காளர்கள்கண்டறியப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்டஆய்வில்சரியாக1லட்சத்து250போலிவாக்காளர்கள்இருப்பதுகண்டறியப்பட்டது.இதில்,11,965வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுமுறைபதிவாகிஉள்ளன.40,009வாக்காளர்களின்முகவரிகள்போலியாவை. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பியபுதியவாக்காளர்களைபதிவுசெய்வதற்கானபடிவம்6ஐ33,692பேர்தவறாகப்பயன்படுத்திஉள்ளனர்.இந்தபடிவத்தைபயன்படுத்திவாக்காளர்கள்பட்டியலில்சேர்க்கப்பட்டவர்களில்பெரும்பாலானவர்கள் 20 வயதை கடந்தவர்கள்.படிவம்6ஐபயன்படுத்தி 70 வயது மூதாட்டியின் பெயர் ஒரேவாக்குச்சாவடியில்2முறைசேர்க்கப்பட்டுள்ளது.அந்த2ஓட்டும்பதிவாகியுள்ளது.ஒரே மூதாட்டிஒருவாக்குச்சாவடியில்எப்படி2வாக்குபோட்டார்என்பதைதேர்தல்ஆணையம்தான்விளக்கவேண்டும்.திட்டமிட்டரீதியில்தேர்தல்முடிவுகளைசீர்குலைக்கும்முயற்சிஇதுஎன்பதுதற்போதுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண் 0 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் உள்ளனர். அந்த இடத்தைப்பார்வையிட்டபோது அங்கு யாரும் வசிக்கவில்லை. ஒரு வாக்காளருக்கு ஒரே தொகுதியில் 4 வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது. கர்நாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்குகளை செலுத்தியுள்ளார். இப்படி பலர் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.இதுதவிரஒருவருக்குமகாராஷ்டிரா,உத்தரபிரதேசத்தில் தலா ஒரு ஓட்டும், பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 2 ஓட்டும் உள்ளது. ஒரே மூதாட்டி ஒரு வாக்குச்சாவடியில் எப்படி 2 வாக்கு போட்டார் என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும். திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண் 0 எனகுறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் உள்ளனர். அந்த இடத்தைப்பார்வையிட்டபோது அங்கு யாரும் வசிக்கவில்லை. ஒரு வாக்காளருக்கு ஒரே தொகுதியில் 4 வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது. கர்நாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்குகளை செலுத்தியுள்ளார். இப்படி பலர் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.இதுதவிரஒருவருக்குமகாராஷ்டிரா,உத்தரபிரதேசத்தில் தலா ஒரு ஓட்டும், பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 2 ஓட்டும் உள்ளதுஇது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவை வழங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் நாங்கள் வாக்காளர் பட்டியலை கவனமாக ஆய்வு செய்வதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவுகளை வழங்கினால் அதை ஆய்வு செய்ய எங்களுக்கு 30 வினாடிகள் போதும். நான் மீண்டும் சொல்கிறேன், அதனால்தான் எங்களுக்கு இதுபோன்ற காகித தரவு வழங்கப்படுகிறது. அதனால் வாக்காளர் பட்டியலை பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. இந்த ஆவணங்கள் ஓசிஆர்ஆப்பயன்படுத்திஸ்கேன்செய்தால்,அவற்றிலிருந்து தரவைப் பெற முடியாது. தேர்தல் ஆணையம் ஏன்இந்தகாகிதத்துண்டுகளைப்பாதுகாக்கிறது? தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே இயந்திரம் படிக்க முடியாத ஆவணங்களை வழங்குகிறது.இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காததும், சட்டத்தை மாற்றுவதன் மூலம் சிசிடிவி காட்சிகளை அனுமதிக்காததும், தேர்தல்களைத் திருட பாஜவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதை எங்களுக்கு உணர்த்தியது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்ததற்கான ஆதாரங்களை அழிக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க ஜனநாயக நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம். ஏனெனில் கடந்த 10-15 ஆண்டுகளாக இயந்திரம் படிக்கக்கூடிய தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் குற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்று அர்த்தம். நாம் மிகவும் விரும்பும் தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகம் இல்லாததால் நீதித்துறை இதில் தலையிட வேண்டும்..தேர்தல்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன். பிரதமர் மோடி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் பிரதமராக உள்ளார். அவர் ஆட்சியில் நீடிக்க 25 இடங்களை மட்டுமே திருட வேண்டியிருந்தது. மக்களவை தேர்தலில் பாஜ 33,000 க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று 25 இடங்களை வென்றது. நமது அரசியலமைப்பின் அடித்தளம் ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கிறது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது.நாம்கருத்துக்கணிப்புகளைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு வாக்கு என்ற கருத்தை எவ்வாறு பெறுவது என்பதுதான் அடிப்படை விஷயம். சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலி நபர்கள் சேர்க்கப்படுகிறார்களா? வாக்காளர் பட்டியல் உண்மையா இல்லையா?What Are The 10 Main Voter Fraud Key Allegations Made By Rahul Gandhi  Against The Election Commission Of India | தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல்  காந்தி வைத்த 10 முக்கிய குற்றச்சாட்டுகள் ...என்றுசிலகாலமாகபொதுமக்களிடையேசந்தேகம்உள்ளது .ஒவ்வொரு கட்சியையும் ஆட்சிக்கு எதிரான அலை தாக்குகிறது, ஆனால் ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரானஅலையால் பாதிக்கப்படாத ஒரே கட்சி பாஜ மட்டுமே. இதனால் தான் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெருமளவில் தவறாகப் போகின்றன. அதே போல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நடத்தும் உள் கருத்துக் கணிப்புகளும் பொய்த்துப்போய் விடுகின்றன. இதே போன்ற தேர்தல் திருட்டு குற்றம் நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் என மிகப்பெரிய அளவில் செய்யப்படுகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார். தேர்தல் ஆணையம் மீது உரிய ஆதாரத்துடன் ராகுல்காந்தி தெரிவித்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close