ராகுல் காந்தி–உங்கள் வாக்கு ஜனநாயகத்தை பாதுகாக்கும்..
உங்கள் வாக்கு ஜனநாயகத்தை பாதுகாக்கும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. 428 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நிர்மல் பவனில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வாக்களித்தனர். பின்னர் தனது தாயுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி அதனை தனது எக்ஸ்சமூகவலை தளத்தில் பகிர்ந்து “நானும், அம்மாவும் எங்கள் வாக்கை செலுத்தி மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவில் பங்களித்தோம். நீங்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வந்து உங்களின்உரிமைகளுக்காகவும்,உங்கள்குடும்பத்தின்எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.உங்கள் வாக்கு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும்.” என பதிவிட்டிருந்தார்.