fbpx
Others

டி.கே.சிவக்குமார்— சித்தராமையாவுக்கு எனது வாழ்த்துகள்.

. கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் மூலம் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் மாநில தலைவர் டி. கே. சிவகுமார், எதிர்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே. எச். முனியப்பா உள்பட பலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.   இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக புதிதாக வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள சாங்கிரிலா ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிதாக வெற்றி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்துள்ள மேலிட பார்வையாளர்கள் ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்று கருத்து கேட்டு பதிவு செய்தனர்.யார் முதல் மந்திரி? டெல்லி விரையும் சித்தராமையா ! என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டேன் - டிகே சிவக்குமார் சூசகம்

பெரும்பாலான எம்எல்ஏக்கள் டி. கே. சிவகுமாருக்கு ஆதரவாக இருப்பது தெரியவருகிறது. கட்சி இவ்வளவு பெரிய வெற்றி பெற சிவகுமார் மேற்கொண்ட முயற்சிகள் தான் காரணம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இதனிடையே, சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்குதான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று போர் கொடி உயர்த்தி வலியுறுத்தி வருகின்றனர். இது காங்கிரஸ் தலைமைக்கு தலைவலி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் இன்று டெல்லி வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி சித்தராமையாவை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்திக்க டி.கே.சிவக்குமாரும் டெல்லி செல்ல உள்ளதாக அறிவித்தார்.இந்நிலையில் உடல் நலக்குறைவால் கர்நாடகா காங். தலைவர் டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவக்குமார்; எனக்கு வயிற்று வலி உள்ளதால் இன்று டெல்லிக்கு செல்ல மாட்டேன். நான் போர்க்கொடியும் தூக்கவில்லை. யாரையும் மிரட்டவுமில்லை. முதலமைச்சரை முடிவு செய்யும் பொறுப்பை நான் கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன்; காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள் என கூறினார். சித்தராமையாவுக்கு வாழ்த்துகள் எனக் கூறி டி.கே.சிவக்குமார் பேட்டியளித்துள்ளதால், முதலமைச்சராக அவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close