மெய்வழி மக்கள் இயக்கம்சட்ட மையத்தின் சார்பில் கோரிக்கை மனு…

தேனிமாவட்டம்மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் தேனி நகராட்சியில் கோரிக்கை மனு !!! மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின்
நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் ஆணைப்படியும், தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் ஆலோசனைப்படியும், மாவட்ட செயலாளர் தினேஷ் அவர்கள் தலைமையில் தேனி பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மின்விசிறி மற்றும் ஆரோ வாட்டர் இயந்திரம் செயல்படாமல் பழுதடைந்து இருப்பதை பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் இவற்றை செப்பனிட்டு செயல்பட வைத்திட வேண்டி தேனி அல்லிநகரம் நகராட்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது… அப்பொழுது உடன் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், அமைப்பாளர் தங்கமாலை இளைஞர் அணி தலைவர் ஈஸ்வரன் மகளிரணி தலைவி ஜெயலீலா துணைத் தலைவர் அமுதா நகர செயலாளர் அருண் துணைச் செயலாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்த நிகழ்வு இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் ??? ……..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி