fbpx
Others

முஹம்மது யூனுஸ்-`வங்கதேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை’

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ், தன்னுடன் தொலைபேசி வழியாக உரையாடியதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

முஹம்மது யூனுஸ் இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “வங்கதேச இடைக்கால ஆட்சியாளர் முஹம்மது யூனுஸிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போது வங்க தேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். நிலையான ஜனநாயகம், அமைதியான மற்றும் முற்போக்கான வங்காளதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகஉறுதியளித்தார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close