Others
மாநிலஅளவிலான சிலம்ப போட்டி நடந்தது….
தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டு பேரவை சார்பில் மாநிலஅளவிலான சிலம்ப போட்டி சென்னை அருகே உள்ள மேலக்கோட்டையூர் கண்டிகையில் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத் தலைவர். என். ஆர். தனபாலன் போட்டியை தொடங்கி வைத்தார்.மேலும் மூத்த ஆசான்கள் முருககனி, சிவபிரகாசத்திற்கு பேரவை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.அருகில் கலைமுதுமணி. ஆர். முருககனி பேரவை நிர்வாகிகள் கஜேந்திரன், நந்தகுமார், சரவணன் உள்ளனர்.

