மாணவி தவறு செய்தது போல் FIR : ஐகோர்ட் சரமாரி கேள்வி….?
அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில், மாணவிதவறுசெய்ததுபோல்FIRபோடப்பட்டுள்ளதாக ஐகோர்ட்கண்டனம்தெரிவித்துள்ளது. மிகவும் மோசமான முறையில் FIR உள்ளதாகவும், வாக்குமூலம் பெறும்போது காவல் அதிகாரிகள் உதவி செய்ய முடியாதா ? எனவும் வினவியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் அடையாளங்களைக் காப்பது காவல்துறையின் கடமை, அதை தவறியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவியின் FIR வெளியானதால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்க, TN அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மாண்பைப் பாதுகாக்கும் வகையில் FIR எழுதப்பட வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், மாணவியிடம் எந்த வகையான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும், அவர் தொடர்ந்து படிக்கத் தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது..