மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்: தலைவர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி..
மன்மோகன்சிங்கின்இறுதி ஊர்வலத்தில் அவரது உடலைக் கொண்டுச் சென்ற ராணுவ வாகனத்தின் மீது கவலை தோய்ந்த முகத்தோடு ராகுல் காந்தி அமர்ந்து சென்றது, மன்மோகன் சிங்குடனான அவரது பந்தத்தை எடுத்துரைக்கிறது. தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் வாடியுள்ளார். அதன் வெளிப்பாடே, தனக்கான நல்ல வழிகாட்டியை இழந்துவிட்டேன் என்று தனது முதல் இரங்கலை எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். டெல்லியில் உள்ள நிகம்போத் காட்டில், முப்படைகளின் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக நடந்த இறுதிச் சடங்கில், ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சோனியா காந்தி,
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், மன்மோகன் சிங் குடும்பத்தினர், பூடான் மன்னர் உள்ளிட்ட பலர், மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டுள்ள நிகம்போத் காட் (Nigambodh Ghat) குறித்து இணையத்தில் தேடல் அதிகரித்துள்ளது. இது, தலைநகர் டெல்லி NCRஇல் உள்ள 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான தகன மேடை ஆகும். யமுனை ஆற்றின் கரையோரத்தில் உள்ள இங்கு சமய சடங்குகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பாரத நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முப்படை மரியாதையுடன் அங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.