மன்னார்குடி,அக்.9 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுவளர்க்க பயிற்சி-சிறப்பு செய்தி
பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விதைகளை மரக்கன்றுகளாக வளர்க்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மன்னார்குடி மணிமேகலை நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து மாணவர்கள் மரக்கன்றுகள் உருவாக்கும் முறை பற்றிய செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்து மரக்கன்றுகளின் பயன்கள் பற்றியும் , சுற்றுச்சூழலை காப்பதில் மாணவர்கள் பங்களிப்பு பற்றியும் பேசினார்.நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர் ஜெகதீஷ் பாபு மாணவர்களுக்கு மரக்கன்று விதைகள் மற்றும் பைகளை வழங்கி விதை வளர்ப்பதற்காக மணல் மற்றும் இயற்கை உரங்களை எந்த விகிதத்தில் கலந்து விதைகளை எவ்வாறு பைகளில் அடைத்து வளர்க்க வேண்டும் என்று பயிற்சி அளித்து, மரக்கன்றுகள் வாங்கி வளர்ப்பதை விட விதைகளை மரக்கன்றுகளாக வளர்த்து அதை பாதுகாத்து வழங்குவது சுற்றுச்சூழல் மேம்பாடு அடைய ஆர்வத்தை மேலும் தூண்டும் என்றனர். வளர்வதற்கு தயார் நிலையில் உள்ள புங்கன் விதைகள் சேகரிக்கப்பட்டு பல்நோக்கு சேவை இயக்கத்தால் வழங்கப்பட்ட இயற்கை உரம், விதைபைகள் கொண்டு பைகளில் எவ்வாறு வளர்ப்பது என்று பயிற்சி அளிக்கப்பட்டது. மரக்கன்றுகளை தங்கள் வீட்டில் சிறப்பாக வளர்த்து பராமரிக்கும் மாணவர்களுக்கு பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.முன்னதாக ஆசிரியர்கணேசன்வரவேற்றார்உடற்கல்விஆசிரியர்அசோக்குமார்நன்றிஉரையாற்றினார்.படம்.மன்னார்குடி அரசு உதவிபெறும் மணிமேகலைப் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விதை நடும் பயிற்சி நடந்தது.