fbpx
Others

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை–முழு உடல் தானம் வழங்கல்..சிறப்பு செய்தி.

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் வாயிலாக , முழு உடல் தானம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்று (21.12.2024 சனிக்கிழமை) வழங்கப்பட்டது.இரத்ததான சேவை,இலவச ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முகாம் சேவை,ஆதரவுற்றோர் மற்றும் வசதி இல்லாதவர் இறுதி சடங்கு சேவை,மழைக்காலங்களில் குடிசை வீடுகளில் வசிப்போருக்கு தார்பாய்கள் வழங்கிடும் சேவை,குளிர்காலங்களில் திறந்த வெளியில் வாழக்கூடிய ஆதரவற்றவர்களுக்கு பெட் சீட்ஸ் மற்றும் பாய்கள் வழங்கிடும் சேவை, உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வரும் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின்மற்றொரு சிறப்பு மிக்க சேவையாகமுழு உடல் தான சேவையும்,
உடல் உறுப்பு தான சேவையும் வழங்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின், நிறுவன தலைவர் ரா.சம்பத்குமார் அவர்களின் ஆலோசனை பேரில்,நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில், இரண்டாவது கட்டமாக8நபர்கள்தங்களதுஉடலைகளைதானமாகவழங்கிடமுன்பதிவுசெய்தனர்.நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவமனைமருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.S. சரோஜினி அவர்கள் உடல்தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் வாயிலாக, முழு உடல் தானம் செய்தவர்கள்: எம்.கே. அண்ணாமலை , நாகப்பட்டினம்,கே. இராஜேந்திரன், வானவன்மகாதேவி,என். சிவராஜா,
வெள்ளப் பள்ளம், எஸ். பவதாரிணி வெள்ளப் பள்ளம்,ஆர். திலகவதி நாகப்பட்டினம்
ஆர். ரமணராம்நாகப்பட்டினம்கோ. பழனிவேல்நாலுவேதபதி, ப. சுமதி நாலுவேதபதிஆகியோர். நாலுவேதபதி K.ராஜேந்திரன்,டிரஸ்ட் நிர்வாகிகள் ட ஜோதி லதா,பொருள்வை I.கண்ணுவாப்பா,
பாலு @ K. பாலசுப்பிரமணியன்ஆகியோர் முன்னிலையில் .நடைப்பெற்றது. ,இந்நிகழ்வில், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். மைதீன் அப்துல் காதர்,துணை முதல்வர் டாக்டர். சாந்தகுமாரி,உடற்கூறியல் துறைத் தலைவர் டாக்டர். P.R. ப்ரஃபுல்லா மற்றும்உதவி பேராசிரியர் டாக்டர். மணிகண்டன் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்று,முழு உடல் தானம் செய்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை,
மாநில ஒருங்கிணைப்பாளர் நாலுவேதபதி கே. ராஜேந்திரன் அவர்களும், நாகை மண்டல மேலிட பொறுப்பாளர் நாகை L. ஜோதி லதா அவர்களும் செய்து இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close