fbpx
REஉலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று சோதனை!

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த சமூக ஆர்வலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,

இம்ரான்கானுக்கும் கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை கொரோனா வைரசுக்கு 9,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 209 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை  2,156 பேர் குணமாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த  சில நாட்களுக்கு முன்பு  அந்நாட்டின் பிரபல சமூகசேவகரான அப்துல் சதார் எதியின் மகனும் எதி அறக்கட்டளையின் தலைவருமான ஃபைசல் எதி ( FaisalEdhi) பிரதமர் இம்ரான்கானை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து  கொரொனோ நிவாரண  நிதிக்கான காசோலையை கொடுத்துள்ளார்.

தற்போது  அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. இதையடுத்து, பிரதமர் இம்ரான் கானிடம்  கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,

கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவரின் தொடர்பாளர்களை பரிசோதிப்பது நடைமுறை அதன் படியே பிரதமர் இம்ரான் கானிடம் பரிசோதனை செய்தோம். என்று  தெரிவித்துள்ளார்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close