மது குடிக்க கல்லூரி மாணவியை நள்ளிரவில்அழைத்த பேராசிரியர்கள்.?
தனியார் விடுதியில் நள்ளிரவு வரை மதுக் குடித்துக் கொண்டிருந்த பேராசிரியர்கள் இருவரும், போதை தலைக்கேறியவுடன் மாணவி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசி மது குடிக்க அழைத்துள்ளனர்.`தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்ட்’ என வர்ணிக்கப்படும் நெல்லை மாநகர எல்லையில் உள்ள பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு கடந்த பழைமையான இந்தக் கல்லூரியில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் படித்து வருகிறார்கள்.

போலீஸார் நடத்திய விசாரணையில் இரு பேராசிரியர்களும் நள்ளிரவில் மது குடித்துவிட்டு செல்போனில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர்கள் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பேராசிரியர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேந்த பேராசிரியர் செபாஸ்டினை அவரது வீட்டில் வைத்து போலீஸார் கைது செய்தனர். மற்றொரு பேராசிரியரான பால்ராஜூக்கு போலீஸார் வரும் தகவல் முன்கூட்டியே தெரிய வந்ததால் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பிவிட்டார் தலைமறைவாக இருக்கும் பால்ராஜை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர்கள்இருவரையும்பணிநீக்கம் செய்துள்ளதாக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளி மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஆசிரியர்கள் இருவர் கைதாகி சில தினங்களுக்குள் நடந்துள்ள இந்த சம்பவம் பாளையங்கோட்டை மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.