மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில்–மிக விரைவில்..
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன
மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி இந்த 2 நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.முன்னதாக ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு வந்தே பாரத்ரெயில் புறப்பட்டு, திண்டுக்கல்ரெயில்நிலையத்துக்கு காலை 6 மணி அளவில் சென்றது. அங்கிருந்து திருச்சிக்கு 7.15 மணிக்கும், சேலத்துக்கு 9.55 மணிக்கும், மதியம் 1.15 மணி அளவில் பெங்களூருவுக்கும் சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரெயில் இரவு மதுரை வந்தடைந்தது.நேற்று ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. புதிய ரெயிலுக்கான அதிகாரப்பூர்வ வழித்தடம், கட்டண விவரம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் ஓரிரு நாளில்வெளியிடப்படும். மதுரையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு போதுமான ரெயில்கள் இல்லை. எனவே வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.