மதுரை–தேரோடும் வீதிகளில் கழிவுநீர் சாக்கடை ஆறு போல ஓடுகிறது…?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் நந்தி சிலை அருகே கழிவுநீர் சாக்கடை நீரூற்று மற்றும் துர்நாற்றம் !!! மதுரை மாவட்டம் மதுரையில்
நந்தி சிலை அருகே உள்ள சாலையில், ஹரிஸ் பேக்கரி எதிரில் உள்ள பாதாள சாக்கடை நீரூற்றுகள் போன்று பொங்கி வழிகிறது . இந்த சம்பவம் குறித்து பல முறை புகார்கள் அளித்தும் கண்டுகொள்ளாது மெத்தனமாகவே இருந்து வரும் மதுரை மாநகராட்சி ? தேரோடும் வீதிகளில் கழிவுநீர் சாக்கடை ஆறு போல ஓடுகிறது.! மீனாட்சி அம்மன்கோயில் மெயின் பாதையே இதுதான்….. இந்த கழிவுநீர் சாக்கடையில் தான் கால் பதித்து பக்தர்கள் கோயிலுக்குள் செல்லும்நிலை உள்ளது…. இதனால் வெளியூர் பயணிகள் முக்கை மூடி செல்லுகின்ற அவலநிலை உள்ளது . மேலும் இவற்றால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது….. இவற்றின் மீது உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையும் இணைந்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் , மற்றும் ஊடகத்துறை மற்றும் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்…….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தேசிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி