மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர்கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து
வருகிறார். இவரது மனைவி அபினையா. இவர்களுக்கு திருமணம் நடந்த ஓராண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.இன்ஸ்பெக்டர் கீதா, ராஜேஷ்-அபினையா தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் அபினையா தனது பெற்றோர் திருமணத்திற்கு போட்ட95 பவுன் நகையை கணவர் ராஜேசிடம் திருப்பி தரும் படி கேட்டார். ராஜேஷ் 95 பவுன் நகையை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து காவல் ஆய்வாளர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும் படி கூறி உள்ளார். நகையை பெற்றுக்கொண்ட காவலா ஆய்வாளர் வங்கிக்கு எடுத்துச் சென்று ரூ.42 லட்சத்திற்குஅடமானம் வைத்து அந்த பணத்தை காவல் ஆய்வாளர் எடுத்துச் சென்று விட்டு புகார் அபினையாவிடம் இந்த செய்தியை சொல்லாமல் மறைத்துள்ளார் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்ஆனால் புகார் கொடுத்த அபிநயா தன் கணவர்ராஜேஷ் தரப்பினரிடம் நகையை கேட்டு போன் செய்துள்ளனர்.அதிர்ச்சியடைந்த அபிநயா கணவர் ராஜேஷ் 95 பவுன் நகையை காவல் ஆய்வாளரிடம் கொடுத்து விட்டதாக கூறிவிட்டு ராஜேஷ் காவல் ஆய்வாளரிடம் நகையை கேட்க அவர் முன்னுக்குப் பின் பதில் அளித்துள்ளார்.. இதனால் நகையை சந்தேகம் அடைந்த அபிநயா கணவர் ராஜேஷ்மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் புகார் கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து 95 பவுன் நகையில் 10 பவுன் நகையை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி நகையைதரவில்லை. அதன் பின்னர்ராஜேஷ் மதுரை மண்டல டிஐஜி இடம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குறித்து கொடுத்துள்ளார்.இந்த புகார் மீது விசாரணை நடத்திய டி.ஐ.ஜி. ரம்யா பாரதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவை அதிரடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். விசாரணை என்ற பெயரில் வேளியே பயிரை மேய்வது போலகாவல்ஆய்வாளரேநிவாரணம்கேட்டுவந்தவர்களிடம்மோசடிசெய்தஇந்தசம்பவம்காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
