fbpx
REஇந்தியாஉலகம்

குட்டையான தலை முடி கொண்ட பெண்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம்!

அகமதாபாத்: உலகிலேயே மிக நீளமான தலை முடி கொண்ட பெண் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாணவி நிலான்ஷி பட்டேல்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் 16 வயதான நிலான்ஷி பட்டேல் என்ற மாணவி. இவரது கூந்தல் 5 அடி 7 அங்குல நீளம் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் வளர்த்து வந்துள்ளார் நிலான்ஷி.

இவரது கூந்தல் தான் உலகிலேயே நீளமானது என கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. அதற்கான சான்றிதழையும் அது நிலான்ஷிக்கு வழங்கியுள்ளது.

கடைசியாக தனது 6 வயதில் முடி வெட்டியுள்ளார் நிலான்ஷி. அப்போது முடி திருத்துவோர் செய்த சிகையலங்காரம் அவருக்குப் பிடிக்காமல் போகவே அதன் பிறகு முடியை வெட்ட அவர் செல்லவில்லை எனக் கூறுகிறார்

தனது நீளமான முடியை வாரம் ஒருமுறை தாயின் உதவியோடு, சுத்தமாக அலசி பராமரித்து வருவதாகக் கூறுகிறார் நிலான்ஷி. பெரும்பாலும் நீளமான முடியை வைத்திருக்கும் பெண்கள் அதனைப் பராமரிக்க அதிக சிரமப்படுவதாகக் கூறுவார்கள். ஆனால், அப்படி நீளமான முடி தனக்கு எவ்வித பிரச்சினையையும் தரவில்லை என்கிறார் நிலான்ஷி. இது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் அவர் கூறுகிறார்.

தான் விளையாட செல்லும்போது மற்றும் வேறு வேலைகளின் போது தனது நீளமான முடியை சடையாக பின்னல் போட்டுக் கொள்வது நிலான்ஷியின் வழக்கமாம். மற்றபடி முடிக்கு என அவர் வேறு எந்த சிறப்பு உணவுகளோ அல்லது பழக்கவழக்கங்களோ மேற்கொள்வதில்லை எனக்கூறுகிறார்.

நீளமான கூந்தல் என்பது பலரது கனவு. ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுவதில்லை. நீள முடியுடன் இருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரமான  ராபுன்செல்லாக குறிப்பிடப்படுகிறார் நிலான்ஷி.

Related Articles

Back to top button
Close
Close