Others
மதுக்கரையில் குட்கா படுஜோர் விற்பனை…? கண்டுகொள்ளாத காவல் துறை ?
கோவை மாவட்டம், மதுக்கரை மார்கெட் செல்லும் பிரதான சாலையில் பல பெட்டி கடையில் அமைந்துள்ளது. இந்த கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசால பொருட்கள் அதிக அளவில் விற்பனைசெய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இப்பகுதியில் வெளிமாநிலத்தினர், கட்டிய வேலையாட்கள் அதிக அளவில் இருப்பதால் இதனை சாதகமாக பயன்படுத்தி குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அருகில் பள்ளிகள் இருப்பதால் , இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கைஎடுப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர். இது போன்ற கடையில் சம்பந்தபட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.