fbpx
Others

கோவை.–போதைப்பொருள் விற்பனை செய்த காவலர் மகன் உள்பட 7 பேர் கைது ..?

:

கோவை., மார்ச்., 29 :கோவை மாநகரில் போதை பொருள் விற்பனை தடுப்பது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில்ஈடுபட்டனர்.அப்போதுமேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கொகைன், கிரீன் கஞ்சா, குஷ், உலர்ந்த கஞ்சா, 25 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், மதுபாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள், கவுண்டிங் மிசின், உள்ளிட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன், விநாயகம், மஹாவிஷ்ணு,கிருஷ்ணகாந்த், ஆதர்ஷ், ரித்தேஷ், ரோகன் ஆகியோர் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. மணிகண்டன் என்பவர், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த போதைப் பொருட்களை பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் விற்பனை மூலம் கோவைப்புதூரில் வீடு கட்டி வருவதும், காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிய வீடு மற்றும் வீட்டு மனை வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதை பொருள் விற்றதாக கைதான 7 பேரில் மகாவிஷ்ணு என்பவர் ( கோவை மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகன் ) என்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் கொரியர் மூலம் அனுப்பி விற்பனை செய்தது தெரியவந்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரியர் மூலம் 1.5 வருடங்களாக மும்பையில் இருந்து போதைப்பொருட்களை தமிழ்நாடு முழுவதும் விற்பனையில் ஈடுபட்டதாகவும். மேலும் தனியார் மதுபான பார்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. கைதானவர்கள் கோவை, ஊட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐ.டி., மற்றும் ரபிடோ, கார் ஓட்டுநராக பணியாற்றி கொண்டு போதைப் பொருள் விற்பனையை முதன்மை தொழிலாக செய்து வந்துள்ளனர். மேலும் இதில் பலர் சம்பந்தபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுத்தப்படவுள்ளனர். என்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் கூரியர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்

 

Related Articles

Back to top button
Close
Close