பெரியகுளம் எண்ட புளி ஊராட்சி பகுதியில் என் எஸ் எஸ் முகாம் துவக்க விழா.

தேனி மாவட்டம் பெரிய குளம் எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட நேருநகர் அருகே ஜே. கே. காலனி பகுதியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது . பெரிய குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்க வைத்தார். கல்லூரி முதல்வர் சேசுராணி, எண்டபுளி ஊராட்சி மன்ற தலைவர் எல்.எம். சின்ன பாண்டியன், அஇ அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை தேனி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மைதீன், பசியில்லா பெரியகுளம் தலைவர் எட்வர்ட், முருகமலை கவுன்சிலர் கோகிலா, கோவிந்தராஜ், பேராசிரியர்கள், சாந்தா மேரி ஜோசிட்டா, பாத்திமா மேரி சில்வியா, நாட்டு நலப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரிமளா தேவி,அமலா ஜாஸ்மின், முனைவர் அருள் இருதய ஜெயந்தி, முனைவர் கஸ்தூரி, அனிதா மேரி , சுனிலா, ஜெயபாரதி, சிவசக்தி இமாகுலேட் ராணி, பிருந்தா, ஐஸ்வர்யா, எண்ட புளி 5வதுவார்டுஉறுப்பினர்பாலு,மற்றும்ஊர்பொதுமக்கள்பலர்கலந்துகொண்டனர்.”இளைஞனே எழுந்திரு” எனும் தலைப்பில் ஏழு நாட்கள் நடைபெற உள்ள நாட்டு நலப் பணிகள் திட்ட முகாமில் தூய்மை பணி, தொழில் பயிற்சி, போதை பொருள் விழிப்புணர்வு, யோகா பயிற்சி, பிளாஸ்டிக் ஒழிப்பு, அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி, காளான் வளர்ப்பு,விளையாட்டு, இலவச பொது மருத்துவ முகாம், இயற்கை விவசாயம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பொதுமக்களுக்கு வழக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழகத்தின் போர்வாள்,அஇஅதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அப்பாஸ் மைதீன் இயற்கையை பாதுகாத்தல், சுற்றுப்புற தூய்மை, பிறருக்கு உதவி செய்தல் உள்ளிட்ட செயல்கள் நம்மை உயர்வடையச் செய்யும் என்றும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் மாணவிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தினார்.